சென்னை:பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க, 1,088 கோடி ரூபாய் நிதிக்கு ஒப்புதல் அளித்து, பொருட்களின் எடை விபரங்களுடன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின், பொங்கலை முன்னிட்டு, அரிசி கார்டுதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போர் என, 2.15 கோடி குடும்பங்களுக்கு, பொங்கல் மற்றும் சமையலுக்கு பயன்படும் 20 வகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்க உத்தரவிட்டு உள்ளார்.
இதையடுத்து, ஒவ் வொன்றும் எவ்வளவு எடையில் வழங்கப்படும் என்ற விபரங்கள் வெளியிட பட்டு உள்ளன.அதன்படி தலா 1 கிலோ பச்சரிசி, வெல்லம், கோதுமை மாவு, ரவை; தலா 50 கிராம் முந்திரி, திராட்சை, மிளகு; 10 கிராம் ஏலக்காய்; தலா அரை கிலோ பாசி பருப்பு, உளுந்தம் பருப்பு, உப்பு.தலா 100 கிராம் நெய், மஞ்சள் துாள், மிளகாய் துாள், மல்லி துாள், கடுகு, சீரகம்; 250 கிராம் கடலை பருப்பு, 200 கிராம் புளி ஆகியவற்றுடன் ஒரு துணி பையும் வழங்கப்பட உள்ளது.
தலா ஒரு பயனாளிக்கு505 ரூபாய் என மொத்தம் 2.15 கோடி பேருக்கு வழங்க, 1,088 கோடி ரூபாய் செலவு வருகிறது. இந்த நிதிக்கு ஒப்புதல் அளித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பரிசு தொகுப்பில் இடம் பெற்றுள்ள நெய் மட்டும், ஆவின் நிறுவனம் வாயிலாக கொள்முதல் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE