தமிழ்நாடு

700 கைதிகள் முன் விடுதலை: இஸ்லாமிய அமைப்புகள் அதிருப்தி!

Added : நவ 20, 2021
Share
Advertisement
-நமது நிருபர்-அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகத்தில் 700 கைதிகள் முன் விடுதலை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல் அரசாணையில் சிறுபான்மை சமூக புறக்கணிப்பு உள்ளதாக கோவை இஸ்லாமிய கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத்கள், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பை சேர்ந்த 15 அமைப்புகளின் பிரதிநிதிகள், கோவை கலெக்டர்



-நமது நிருபர்-

அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகத்தில் 700 கைதிகள் முன் விடுதலை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல் அரசாணையில் சிறுபான்மை சமூக புறக்கணிப்பு உள்ளதாக கோவை இஸ்லாமிய கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத்கள், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பை சேர்ந்த 15 அமைப்புகளின் பிரதிநிதிகள், கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று காலை வந்தனர். அவர்களை கலெக்டர் சமீரன் சந்தித்துப் பேசினார்.அப்போது கூட்டமைப்பின் சார்பில் தரப்பட்ட மனுவில், 'வரும் செப்.,15, அண்ணாதுரையின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகத்தில் 700 கைதிகள்முன் விடுதலை செய்யப்படுவார்கள் என்று சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதற்கான வழிகாட்டுதல் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.அதில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகளுக்கு முரணாகவும், மதச்சார்பற்ற நீதிமுறைகளுக்கு மாற்றாகவும் சிறுபான்மை சமூகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.எனவே, தமிழக முதல்வர் இந்த அரசாணையில் திருத்தம் ஏற்படுத்தி, ஜாதி, மத பேதமின்றி, சிறைக்கைதிகளை முன் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.மனுவைப் பெற்ற கலெக்டர் சமீரன், 'இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் எந்தப் பரிந்துரையையும் அனுப்ப இயலாது; ஆனால், முதல்வரைச் சந்திக்க ஏற்பாடு செய்து தருகிறோம். நீங்கள் அவரிடம் நேரடியாக முறையிட்டுக் கொள்ளலாம்.' என்று கூறியதாக இஸ்லாமிய அமைப்பினர் தெரிவித்தனர்.ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நிர்வாகி ஹக்கீம் கூறுகையில்,''கடந்த 2008ல் தி.மு.க., ஆட்சியில், மதுரை லீலாவதி கொலை வழக்கில் கைதாகி ஆயுள்கைதியாக இருந்த தி.மு.க.,வினர் முன் விடுதலை செய்யப்பட்டனர்.2018ல், கோவை வேளாண் பல்கலை மாணவிகள் மூன்று பேரை எரித்துக்கொன்ற வழக்கில் கைதிகளாக இருந்த அ.தி.மு.க.,வினர் முன் விடுதலையாகினர்.ஆனால், கோவையில் மொத்தம் 39 முஸ்லிம் கைதிகள், 23 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இவர்களில் குண்டு வெடிப்பு தொடர்பான 20 கைதிகளைத் தவிர்த்து, கொலை, கலவர வழக்குகளில் கைதான 19 கைதிகளை விடுவிக்க வேண்டுமென்பதே எங்களின் கோரிக்கை.ஆனால் முன் விடுதலை தொடர்பான அரசாணையில் இதைத் தவிர்க்கும் வகையில், புதிதாக 3 ஷரத்துகள் சேர்க்கப்பட்டுள்ளன.இதற்கு முன்பாக இரு முறை முன் விடுதலைக்காக வெளியிடப்பட்ட அரசாணையில், ஆயுள்கைதிகள் விடுதலை செய்யப்படுவதாக மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது. இப்போது மூன்று அம்சங்களைச் சேர்த்துள்ளதால், 23 ஆண்டுகளாக சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகள் விடுதலையாவதில் சிக்கல் உள்ளது.எனவே, முதல்வரைச் சந்தித்து முறையிடுவதற்கு முடிவு செய்துள்ளோம்.'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X