குடிநீர் தொட்டியில் ஏறி தற்கொலை முயற்சி: ஆட்டோ டிரைவரிடம் விசாரணை

Added : நவ 20, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி: போலீஸ் விசாரணைக்கு பயந்து, குடிநீர் மேல்நிலைத்தொட்டியில் ஏறி, ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ஜோதிநகர் சி காலனியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் சித்திக், 27. இவர், நேற்றுமுன்தினம் பத்ரகாளியம்மன் கோவில் அருகே, ஆட்டோவில் சென்றபோது, காரை முந்திச்செல்ல முயன்றபோது கார் மீது மோதியுள்ளார்.இதனால்,


பொள்ளாச்சி: போலீஸ் விசாரணைக்கு பயந்து, குடிநீர் மேல்நிலைத்தொட்டியில் ஏறி, ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ஜோதிநகர் சி காலனியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் சித்திக், 27. இவர், நேற்றுமுன்தினம் பத்ரகாளியம்மன் கோவில் அருகே, ஆட்டோவில் சென்றபோது, காரை முந்திச்செல்ல முயன்றபோது கார் மீது மோதியுள்ளார்.இதனால், காரில் வந்த மதன்குமாருக்கும், 27, சித்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மதன்குமார், கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். சித்திக், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், காயமடைந்ததாகக்கூறி சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.போலீசார், சித்திக் கிடம் விசாரணை நடத்த அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.இதை கவனித்த, சித்திக், நேற்றுமுன்தினம் இரவு, மருத்துவமனை வளாகத்தில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் ஏறி, தற்கொலைக்கு முயன்றுள்ளார். எஸ்.ஐ., திருமலைசாமி மற்றும் போலீசார் சமரச பேச்சு நடத்தி கீழே இறங்கச் செய்தனர்.போலீசார் கூறுகையில், 'சித்திக் குடிபோதையில் வாகனத்தின் மீது மோதியதுடன், வழக்குப்பதிவு செய்து விடுவர் என்ற அச்சத்தில், குடிநீர் தொட்டியில் ஏறியதாக கூறுகிறார்.'சித்திக் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன. இது குறித்து, விசாரணை மேற்கொள்ளப்படுகிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X