சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., ஆட்சியில் தரமற்ற கட்டுமானம்: 'கான்ட்ராக்ட்' வழங்கியவர்களுக்கு சிக்கல்

Added : நவ 20, 2021
Share
Advertisement
தமிழகத்தில் கடந்த ஆட்சியில் தரமற்ற முறையில் கட்டப்பட்ட அரசு கட்டடங்களில் பல கட்டுமானங்கள் இடிந்தும், இடிக்கப்பட்டும் வருகிறது. இதில் வேண்டியவர்களுக்கு ஒப்பந்தம் வழங்கிய வகையில் முன்னாள் ஆட்சியாளர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சியின் இறுதி கட்டத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில், அத்திக்கடவு - அவினாசி திட்டம், கீழ்பவானி, தடப்பள்ளி -

தமிழகத்தில் கடந்த ஆட்சியில் தரமற்ற முறையில் கட்டப்பட்ட அரசு கட்டடங்களில் பல கட்டுமானங்கள் இடிந்தும், இடிக்கப்பட்டும் வருகிறது. இதில் வேண்டியவர்களுக்கு ஒப்பந்தம் வழங்கிய வகையில் முன்னாள் ஆட்சியாளர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சியின் இறுதி கட்டத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில், அத்திக்கடவு - அவினாசி திட்டம், கீழ்பவானி, தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசன கான்கிரீட் திட்டம், நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி கட்டடம் என பல திட்ட பணிகளை துவக்கினர். ஈரோடு, நாமக்கல் பகுதியைச் சேர்ந்த குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்கள் வாயிலாக பணிகள் நடந்தன.

பலவாறான கமிஷன், தரமற்ற கட்டுமானம் போன்ற காரணத்தால், அவை ஒவ்வொன்றாக இடிந்தும், இடிக்கப்பட்டும் வருகிறது. இது ஒப்பந்ததாரர்கள் சரிவர பணி செய்யாததை வெட்ட வெளிச்சமாக்கி வருகிறது.கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சென்னை தத்தளித்த போது, மழை நீர் தேக்க பாதிப்பை பார்வையிட்டார். அப்போது, முதல்வர் ஸ்டாலின், ''கடந்த ஆட்சியின் அலட்சியமான திட்டப்பணி, கட்டுமான பணி, தரமற்ற குடியிருப்பு கட்டுமானம் உள்ளிட்டவை தொடர்பாக விரைவில் விசாரணை கமிஷன் அமைத்து, தவறு செய்த அனைவரும் தண்டிக்கப்படுவார்கள்,'' என்றார்.


பரிந்துரை

மேலும் முதல்வர் ஒவ்வொரு துறை ரீதியாக ஆய்வு நடத்தி, கடந்த மூன்று ஆண்டுகளில் நடந்த பணிகள், கட்டுமானம், திட்டங்களில் நடந்த முறைகேடு, தவறு, யார் பரிந்துரையால், யாரால் செய்யப்பட்டது என்ற விபரங்கள் பெறப்பட்டுள்ளன. இதில், பல திட்டங்கள் முன்னாள் ஆட்சியாளருக்கு வேண்டியவர்கள் என்ற பட்டியலில் உள்ள ஈரோடு, நாமக்கல் ஒப்பந்த தாரர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் செய்தது கண்டறியப்பட்டு உள்ளது.
சென்னை புளியந்தோப்பில் குடிசை மாற்று வாரியத்துக்கு, தனியார் கட்டுமான நிறுவனம் 1,920 வீடுகள், பத்து மாடிகளாக கட்டி முடித்தனர். வீடுகளில் காரையும், சுவரும் பெயர்ந்து வருதல், சுரண்டினால் மண் விழுவதாக எழுந்த புகாரால், அதை சீரமைத்து தர கெடு விதித்துள்ளனர்.
அதை தொடர்ந்து குடிசை மாற்று வாரியம் மற்றும் வீட்டு வசதி வாரியத்தால் கடந்த நான்கு ஆண்டுகளில் கட்டிய அனைத்து வீடு, குடியிருப்புகளையும் ஆய்வு செய்து, முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அதில் பல புகார்கள் குவிந்துள்ளன.
நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு, ஐந்து கட்டடங்கள் 112.32 கோடி ரூபாயிலும், அரசு மருத்துவமனைக்கு ஒன்பது கட்டடங்கள், 157.21 கோடி ரூபாயிலும், குடியிருப்புகளுக்கு, எட்டு கட்டடங்கள் 69.22 கோடி ரூபாயிலும் பணிகள் நடந்துள்ளன. அதில் மருந்துவ கல்லுாரி கட்டடத்தின் இரண்டாம் தளம் கட்டட பணியின் போதே இடிந்து, வெளிமாநில தொழிலாளர்கள் ஐவர் பாதிக்கப்பட்டனர்.


சோதனை

இச்சம்பவம் நடந்த, நேரம், அக்கட்டுமான பணி செய்த ஈரோடை சேர்ந்த தனியார் நிறுவனம் மீது சில புகார்கள் எழுந்ததுடன், அவர்களது நிறுவனம் மீது வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டது.அடுத்து ஈரோடு மாவட்டம், கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் சுவர், குறிப்பிட்ட இடங்களில் தளம் அமைக்க, 710 கோடி ரூபாயிலான பணி நடந்தது. கடந்த ஆகஸ்ட் 19 மற்றும், 20ல் மிகப்பெரிய உடைப்பு ஏற்பட்டு, 35 நாட்கள் தண்ணீர் நிறுத்தம் செய்தனர். அங்கும் தரமற்ற கட்டுமானம் என்ற புகார் முன்வைக்கப்பட்டது.
அடுத்து விழுப்புரம் மாவட்டம், தளவானுார், கடலுார் மாவட்டம் எனதிரிமங்களம் இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 25.35 கோடி ரூபாயில் கட்டப்பட்ட தடுப்பணையின் மண் கரைகள் நவ.9ம் தேதி முதல், 15 வரை அடுத்தடுத்து அடித்து சென்று, மதகுகள் சேதமடைந்தன. அணை தடுப்பு சுவர்கள் வெடிவைத்து தகர்க்கப்பட்டன.
திருப்பூர் மாவட்டம் குளத்துப்புதுாரில் பாதாள சாக்கடை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணி, 60 சதவீதம் முடிந்த நிலையில் மழை நீர் சூழ்ந்து, மூன்று அடி கட்டடம் பூமிக்குள் புதைந்தது பூதாகாரமாகி வருகிறது.இவ்வாறாக அடுத்தடுத்து புகார்கள் எழுந்து உள்ளது தரமற்ற கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டதை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.


கிலி

அப்பணிகளுக்கான ஒப்பந்ததாரர்கள் அனைவரும் முன்னாள் ஆட்சியாளருக்கு வேண்டியவர்கள் என்றும், அவர் பரிந்துரையால் பணி வழங்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த கட்டுமான பணிகள் காரணமாக, முன்னாள் ஆட்சியாளரும் சிக்கலில் உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட அனைத்து கட்டடங்களின் ஸ்திர தன்மையை கண்டறிய தனியாக குழு அமைக்கவும், அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியாகி உள்ள தகவல், கடந்த ஆட்சியாளர்களுக்கும், அவர்களால் ஆதாயம் அடைந்தவர்களுக்கும் கிலியை ஏற்படுத்தி உள்ளது.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X