சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இன்சூரன்ஸ் கிடைக்கல 16 வயது சிறுமி அவதி

Added : நவ 20, 2021
Share
Advertisement
பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்டம், குரும்பாபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி ஆசிரியர் ஜோசப் ராபர்ட். இவரது மகள் நட்சத்திரா, 16. இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். சில தினங்களுக்கு முன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். தனியார் மருத்துவமனையில் சோதனை செய்தபோது, முதுகு தண்டுவடத்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு உள்ளது தெரிந்தது. இதையடுத்து வேலுார் சி.எம்.சி.,

பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்டம், குரும்பாபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி ஆசிரியர் ஜோசப் ராபர்ட். இவரது மகள் நட்சத்திரா, 16. இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். சில தினங்களுக்கு முன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.

தனியார் மருத்துவமனையில் சோதனை செய்தபோது, முதுகு தண்டுவடத்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு உள்ளது தெரிந்தது. இதையடுத்து வேலுார் சி.எம்.சி., மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.தந்தை அரசு ஊழியராக இருப்பதால் இவருக்கு அரசு ஊழியர் குடும்ப உறுப்பினருக்கான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் - என்.எச்.ஐ.எஸ்., காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கலாம் என மருத்துவமனை நிர்வாகம் கூறியது.

புற்றுநோய்க்கான சிறப்பு சிகிச்சைக்காக அதிகபட்சமாக, 10 லட்சம் ரூபாய் வரை, செலவினத்தை ஏற்பதாக என்.எச்.ஐ.எஸ்., 2021 அரசாணையில் அறிவித்துள்ளது. ஆனால் 'வேலுார் சி.எம்.சி., மருத்துவமனை நிர்வாகம் அதற்கான அங்கீகாரம் பெறவில்லை' என, இன்ஸ்சூரன்ஸ் நிறுவனம் சிகிச்சைக்கான பணம் வழங்காமல் தட்டிக் கழிக்கின்றனர். தமிழகத்தில் வேலுார் சி.எம்.சி., மருத்துவமனை உட்பட நான்கு மருத்துவமனைகளில் மட்டுமே புற்றுநோய் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வசதிகள் உள்ளன.

அதிலும், வேலுார் சி.எம்.சி., மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படும் என்ற நம்பிக்கையின் காரணமாகவே சிறுமி நட்சத்திரா இம்மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு உள்ளார். எனவே முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு, சிறுமியின் சிகிச்சைக்கு இன்ஸ்சூரன்ஸ் தொகை கிடைக்கவும், உரிய சிகிச்சை கிடைத்து அவர் மறுவாழ்வு பெறவும் உதவிட வேண்டும் என, சிறுமியின் பெற்றோர் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X