பொது செய்தி

தமிழ்நாடு

மீட்பு பணியில் தீயணைப்பு வீரர்கள் சென்னையில் 1,150 பேர் தயார்!

Added : நவ 20, 2021
Share
Advertisement
சென்னை:சென்னையில் மழை வெள்ள பாதிப்பு பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்ள, தீயணைப்பு வீரர்கள் மற்றும் அலுவலர்கள் என, 1,150 பேர் தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்க பட்டு உள்ளது.வடகிழக்கு பருவமழை காரணமாக, கடலுார், விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில், வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில், 300க்கும் மேற்பட்டதீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.கடலுார்
 மீட்பு பணியில் தீயணைப்பு வீரர்கள் சென்னையில் 1,150 பேர் தயார்!

சென்னை:சென்னையில் மழை வெள்ள பாதிப்பு பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்ள, தீயணைப்பு வீரர்கள் மற்றும் அலுவலர்கள் என, 1,150 பேர் தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்க பட்டு உள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக, கடலுார், விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில், வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில், 300க்கும் மேற்பட்டதீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.கடலுார் மாவட்டம், சிறியகங்கணாங்குப்பம் கிராமத்தை தென்பெண்ணையாற்றின் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அங்கு சிக்கித் தவித்த 50 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், தேவதானம் கிராமத்தில் பாலாற்றின் நீர் சூழ்ந்துள்ளது. அங்கு சிக்கித் தவித்த, 30 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர்.அதேபோல, கடலுார், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார் உள்ளிட்ட மாவட்டங்களிலும், 2 நாட்களில், 1,947 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். குடியிருப்புகளில் சூழ்ந்துள்ள வெள்ள நீர், 28 மோட்டார் பம்புகள் வாயிலாக வெளியேற்றப்பட்டு உள்ளது. அந்த மாவட்டங்களில், ஆடு, மாடு, கோழி என 835 விலங்குகளும் மீட்கப்பட்டுள்ளன.
சென்னையில் வெள்ளத்தால் அதிகம் நீர் தேங்கும், தாம்பரம், முடிச்சூர், தி.நகர் பசுல்லா சாலை, கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, கொளத்துார் ஜவஹர் நகர், பெரியார் நகர், கொரட்டூர் மற்றும் வேளச்சேரியில், 50 மோட்டார் பம்புகள் வைக்கப்பட்டுள்ளன. நீச்சல் பயிற்சி பெற்ற 20 பேர் அடங்கிய, இரண்டு கமாண்டோ படையினர் ஆயத்த நிலையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் மீட்பு பணிகளுக்கு, தீயணைப்பு வீரர்கள் மற்றும் அலுவலர்கள் என 1,150 பேர் தயார் நிலையில் உள்ளனர்.உதவிக்கு, கட்டணமில்லா தொலைபேசி எண்ணான, 101, 112 மற்றும் 'தீ' என்ற 'மொபைல் ஆப்' வாயிலாக அழைக்கலாம் என, தீயணைப்பு துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X