கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மனநலம் பாதித்தோரிடம் விசாரணை: விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவு

Added : நவ 20, 2021
Share
Advertisement
மதுரை:'மன அழுத்தம், மனச்சிதைவு, இருமுனையப் பிறழ்வு என்றால் என்ன என அறிந்துகொள்ள வேண்டும். அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளும் நடைமுறை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை கந்துவட்டி தடைச் சட்டத்தின் கீழ் தட்டப்பாறை போலீசார்

மதுரை:'மன அழுத்தம், மனச்சிதைவு, இருமுனையப் பிறழ்வு என்றால் என்ன என அறிந்துகொள்ள வேண்டும். அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளும் நடைமுறை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை கந்துவட்டி தடைச் சட்டத்தின் கீழ் தட்டப்பாறை போலீசார் கைது செய்தனர். அவர் துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். ஜாமின் மனு நிலுவையில் உள்ளது. அவருக்கு மனநல பாதிப்பு குறிப்பாக இருமுனையப் பிறழ்வு - பைபோலர் டிசார்டர் உள்ளதாகவும், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிடக்கோரியும் அவரது மனைவி உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார்.
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவு: 'ரிமாண்ட்' கைதி மனநலம் பாதிக்கப்பட்டிருக்கும் போது, அவரது நிலையை குடும்ப உறுப்பினர்கள் அல்லது அவரை பராமரித்தவர்களால் மட்டுமே அறிய முடியும். தேவைப்படும் கைதிகளுக்கு மனநல மருத்துவ வசதி வழங்குவதே சட்டத்தின் நோக்கம்.

மனநலம் பாதித்த கைதிகளுக்காக ஒவ்வொரு மாநில மற்றும் யூனியன் பிரதேசத்திலும் குறைந்தபட்சம் ஒரு சிறையிலாவது மனநல மருத்துவப் பிரிவு ஏற்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.கைதானவர் ரிமாண்டிற்கு தகுதியானவர் என்று சான்று அளிப்பதற்கு முன் அவர் எவ்வித மனநோயாலும் பாதிக்கப்படவில்லை என பரிசோதிக்க வேண்டியது டாக்டரின் கடமை.
மனுதாரரின் கணவர் இருமுனையப் பிறழ்வால் பாதிக்கப்பட்டவர். இவர் சாதாரணமாகத் தோன்றுவார். மனநிலை மாற்றங்களின் காரணமாக அவரது நடத்தை எவ்வாறு மாறலாம் என்பதை பராமரிப்பாளர்கள் மட்டுமே அறிவர். அத்தகைய நபர்கள் நிலைமை கட்டுப் பாட்டை மீறாமல் தடுக்க மருத்துவச் சிகிச்சையில் இருக்க வேண்டும். மனநோயாளிகள் புறக்கணிக்கப்படக்கூடாது. அவர்கள் கண்ணியமாக வாழ மனநல பாதுகாப்புச் சட்டம் வழிவகுக்கிறது.

மனுதாரர் தன் கணவரின் நிலையை விவரித்தபோது என் மனம் உடைந்து போனது. மன அழுத்தம், மனச்சிதைவு, இருமுனையக் கோளாறு என்றால் என்ன என்பதை ஒருவர் அறிந்துகொள்ள வேண்டும். காவல் துறை பயிற்சி அகாடமிகள், நீதித் துறை அகாடமிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. சிறந்த சிகிச்சை அளிக்க மனுதாரரின் கணவரை திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X