பொது செய்தி

தமிழ்நாடு

'சைபர் க்ரைமில்' 10 ஆயிரம் புகார்கள் விழிப்புடன் செயல்பட அறிவுறுத்தல்

Added : நவ 20, 2021
Share
Advertisement
தமிழகத்தில், 'சைபர் க்ரைம்' போலீஸ் ஸ்டேஷன்களில் ஆறு மாதங்களில், 10 ஆயிரம் புகார்கள் குவிந்துள்ளன. தமிழகத்தில் ஜூன் முதல் மாவட்டம், மாநகரம் தோறும் சைபர் க்ரைம் போலீஸ் ஸ்டேஷன்கள் முழுமையாக செயல்பட துவங்கின. 6 மாதங்கள்இந்த ஸ்டேஷன்களில் சைபர் க்ரைம் தொடர்பாக பழைய புகார்கள், தற்போதைய புகார்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.கடந்த, ஜூன் துவங்கி,

தமிழகத்தில், 'சைபர் க்ரைம்' போலீஸ் ஸ்டேஷன்களில் ஆறு மாதங்களில், 10 ஆயிரம் புகார்கள் குவிந்துள்ளன.

தமிழகத்தில் ஜூன் முதல் மாவட்டம், மாநகரம் தோறும் சைபர் க்ரைம் போலீஸ் ஸ்டேஷன்கள் முழுமையாக செயல்பட துவங்கின. 6 மாதங்கள்இந்த ஸ்டேஷன்களில் சைபர் க்ரைம் தொடர்பாக பழைய புகார்கள், தற்போதைய புகார்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
கடந்த, ஜூன் துவங்கி, நவம்பர் 15 வரை, 10 ஆயிரம் புகார்கள் வந்துள்ளன. இதில் 1,800 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சேலம் மாநகர், மாவட்டத்தில், 500 புகார்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டுள்ள நிலையில், 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் 10க்கு மட்டும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் கால சூழலுக்கு ஏற்ப புதிய யுக்திகளை கையாண்டு மக்களை ஏமாற்றி பணம் பறிப்பதை தொடர்ந்து மேற்கொண்டு வருவதால், புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது.பொதுமக்கள் உஷாராக இருக்கவும், சைபர் க்ரைம் குற்றவாளிகளிடம் இருந்து தப்பிக்க அறிவுரைகளை பொதுமக்களுக்கு அதிகாரிகள் வழங்கி உள்ளனர்.
புதிய யுக்திசைபர் க்ரைம் குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்.பி., ஒருவர் கூறியதாவது: 'வாட்ஸ் ஆப்', 'பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அறிமுகம் இல்லாதவர்களை நண்பர்களாக வைத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. மொபைல் போனில் வரும் அழைப்புக்களில் எக்காரணம் கொண்டும் உங்களின் சுய விபரங்களையோ, ரகசிய எண்களையோ தெரிவிக்க கூடாது.
தேவையில்லாமல் வரும் செயலிகளை டவுன் லோடு செய்வது, அவற்றை ஒப்பன் செய்வது, லிங்க் கொடுப்பது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். குற்றவாளிகள் மக்களின் உணர்வுகளுக்கு ஏற்ப புதிய யுக்திகளை கையாண்டு மோசடிகளை அரங்கேற்றுவதால், எப்போதும் உஷாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X