என் பிரச்னை முடிவுக்கு வரும்: சிலம்பரசன் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

என் பிரச்னை முடிவுக்கு வரும்: சிலம்பரசன்

Added : நவ 20, 2021
Share
சென்னை:''யாரை பற்றியும் தனிப்பட்ட முறையில் நான் புகார் கூறியது இல்லை; சொல்ல நிறைய இருக்கிறது. ஆனால், எனக்கு அது பிடிக்காது. என் பிரச்னை நிச்சயம் முடிவுக்கு வரும். அதை நானே பார்த்துக் கொள்வேன்,'' என, சிலம்பரசன் கூறினார்.நடிகர் சிலம்பரசன் அளித்த பேட்டி:மாநாடு படம், 'டைம் லுாப்'பில் அரசியலை கலந்து சொல்லி உள்ளோம். அரசியல் படமாக அல்லாமல், பின்னணியில் மட்டுமே அரசியல்
 என் பிரச்னை முடிவுக்கு வரும்: சிலம்பரசன்

சென்னை:''யாரை பற்றியும் தனிப்பட்ட முறையில் நான் புகார் கூறியது இல்லை; சொல்ல நிறைய இருக்கிறது. ஆனால், எனக்கு அது பிடிக்காது. என் பிரச்னை நிச்சயம் முடிவுக்கு வரும். அதை நானே பார்த்துக் கொள்வேன்,'' என, சிலம்பரசன் கூறினார்.
நடிகர் சிலம்பரசன் அளித்த பேட்டி:மாநாடு படம், 'டைம் லுாப்'பில் அரசியலை கலந்து சொல்லி உள்ளோம். அரசியல் படமாக அல்லாமல், பின்னணியில் மட்டுமே அரசியல் கொஞ்சம் இருக்கும். வாலு படத்திலேயே எனக்கு நிறைய பிரச்னை வந்தது. அதையெல்லாம் கடந்து தான் வந்தேன். இந்த, மாநாடு படம் ரொம்ப உணர்ச்சிகரமான படமாகி விட்டது. பல முறை நின்று போய், ஆரம்பமானது. இடையில் கொரோனா, உடல் இளைப்பு என பல பிரச்னை ஏற்பட்டது. உள்ளுக்குள் இருந்த வலியால் தான் கட்டுப்படுத்த முடியாமல் அழுது விட்டேன்.

என் திருமணம் நடக்கும் போது நடக்கும்; அதுவரை என் வேலையை நான் செய்கிறேன். நான் உடல் எடையை குறைக்கும் போது, சின்ன இடைவேளை விட்டால், மீண்டும் உடல் எடை கூடிவிடுகிறது. இதிலிருந்து முற்றிலும்வெளியே வருவது கடினமாக இருந்தது. கொரோனா காலத்தில், இரண்டு மாதம் திட உணவை முற்றிலும் தவிர்த்து விட்டேன்.
அதுபோக உடற்பயிற்சியிலும் ஈடுபட்டேன்; 27 கிலோ குறைந்துள்ளேன்.தயாரிப்பாளர் தரப்பில் என் மீது கூறப்படும் பிரச்னையை பொறுத்தவரை, யாரை பற்றியும் தனிப்பட்ட முறையில் நான் புகார் கூறியது இல்லை. சொல்ல வேண்டும் என்றால் நிறைய இருக்கிறது; எனக்கு அது பிடிக்காது. என் பிரச்னை நிச்சயம்முடிவுக்கு வரும். அதை நானே பார்த்துக் கொள்வேன்.
பிரச்னை என்றால் மட்டுமே அதுபற்றி நான் பேசுவேன். மற்றபடி அரசியலில் ஈடுபடும் எண்ணம் இருந்தது இல்லை. என்னை ஆளாக்கிய ரசிகர்களை, அரசியலை தவிர்த்து வேறு விதமாக அழைத்துச் செல்ல வேண்டிய கடமை எனக்கு உள்ளது. அதற்காக சில வேலைகளை செய்து வருகிறேன். அதைப்பற்றி விரைவில் தெரிவிப்பேன்.
சினிமா தற்போது மாறி வருகிறது. அதற்கேற்ப நாமும் மாற வேண்டும்; வித்தியாசமான கதைகளை தர வேண்டும். இவ்வாறு சிலம்பரசன் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X