சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'செக்ஸ்' டார்ச்சரா? பிளஸ் 2 மாணவி தற்கொலை

Added : நவ 20, 2021
Share
Advertisement
கரூர்:'இனி எந்த ஒரு பொண்ணும் என்னை மாதிரி சாகக் கூடாது' என, கடிதம் எழுதி விட்டு, கரூர் தனியார் பள்ளி மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.கரூரைச் சேர்ந்த, 17 வயது சிறுமி, தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். தந்தை இறந்து விட்டார். தாயுடன் வசித்து வந்த மாணவி நேற்று முன்தினம் மாலை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இறப்பிற்கு முன் மாணவி கடிதம் ஒன்றை டைரியில்

கரூர்:'இனி எந்த ஒரு பொண்ணும் என்னை மாதிரி சாகக் கூடாது' என, கடிதம் எழுதி விட்டு, கரூர் தனியார் பள்ளி மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கரூரைச் சேர்ந்த, 17 வயது சிறுமி, தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். தந்தை இறந்து விட்டார். தாயுடன் வசித்து வந்த மாணவி நேற்று முன்தினம் மாலை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இறப்பிற்கு முன் மாணவி கடிதம் ஒன்றை டைரியில் எழுதியுள்ளார்.அதில், 'செக்ஸூவல் அராஸ்மென்ட்டுக்கு சாகற கடைசி பொண்ணு, நானாகத் தான் இருக்கணும்.

என்னை யார் இந்த முடிவு எடுக்க வச்சான்னு நான் சொல்ல பயமாக இருக்கு. இந்த பூமியில வாழ ஆசைப்பட்டேன். ஆனால், பாதியில போறேன். 'இன்னொரு தடவ இந்த உலகத்துல வாழ வாய்ப்பு கிடைச்சா நல்லா இருக்கும். ஐ லவ் யு அம்மா, சித்தப்பா, மாமா உங்க எல்லோரையும் எனக்கு ரொம்ப புடிக்கும். 'ஆனால், உங்ககிட்ட எல்லாம் சொல்லாம போறேன். மன்னிருச்சுருங்க. இனி எந்த ஒரு பொண்ணும் என்னை மாதிரி சாகக் கூடாது. சாரி மச்சான் சாரி' என, எழுதியுள்ளார்.
கடிதத்தை கைப்பற்றிய கரூர் போலீசார், பள்ளியில் பாலியல் தொல்லை நடந்ததா அல்லது உறவினர்கள் மத்தியில் நடந்ததா என விசாரிக்கின்றனர். பாலியல் தொல்லை கொடுத்த நபர் குறித்து மாணவி விபரம் எழுதாததால் போலீசார் குழப்பம்அடைந்துள்ளனர். மாணவியின் மொபைல் போனை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.


இன்ஸ்பெக்டர் மாற்றம்

மாணவி தற்கொலை குறித்து இன்ஸ்பெக்டர் கண்ணதாசன், உரிய முறையில் விசாரிக்க வில்லை என, புகார் எழுந்தது.இதையடுத்து, கண்ணதாசனை திருச்சி சரகத்துக்கு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி டி.ஐ.ஜி., சரவண சுந்தர் நேற்று மாலை உத்தரவிட்டார். மேலும், மாணவி தற்கொலை வழக்கை குளித்தலை மகளிர் இன்ஸ்பெக்டர் காந்திமதி விசாரிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X