பொது செய்தி

தமிழ்நாடு

'தடய மரபணு தேடல்' மென்பொருள் வெளியீடு

Added : நவ 20, 2021
Share
Advertisement
சென்னை:தமிழக தடய அறிவியல் துறையால் உருவாக்கப்பட்டுள்ள, 'தடய மரபணு தேடல்' என்ற மென்பொருள், நேற்று முதல்வர் ஸ்டாலினால் வெளியிடப்பட்டது. பல்வேறு குற்றங்களையும், சட்ட சிக்கல்களையும் அறிவியல் பூர்வமாக, துல்லியமாக தீர்க்கும் பணியில், தமிழக தடய அறிவியல் துறை முக்கிய பங்காற்றி வருகிறது. இத்துறையின், 14 பிரிவுகளில் டி.என்.ஏ., பிரிவும் ஒன்று.இந்த பிரிவு, அறிவியல் தொழில்நுட்ப
 'தடய மரபணு தேடல்'  மென்பொருள் வெளியீடு

சென்னை:தமிழக தடய அறிவியல் துறையால் உருவாக்கப்பட்டுள்ள, 'தடய மரபணு தேடல்' என்ற மென்பொருள், நேற்று முதல்வர் ஸ்டாலினால் வெளியிடப்பட்டது. பல்வேறு குற்றங்களையும், சட்ட சிக்கல்களையும் அறிவியல் பூர்வமாக, துல்லியமாக தீர்க்கும் பணியில், தமிழக தடய அறிவியல் துறை முக்கிய பங்காற்றி வருகிறது.
இத்துறையின், 14 பிரிவுகளில் டி.என்.ஏ., பிரிவும் ஒன்று.இந்த பிரிவு, அறிவியல் தொழில்நுட்ப உதவியுடன், பெற்றோர், குழந்தைகள் மரபு வழி தொடர்புகளை கண்டறிதல்; அடையாளம் தெரியாத பிரேதங்களை மரபணு வழியே கண்டறிந்து உரியவரிடம் ஒப்படைத்தல். கொலை, கற்பழிப்பு, கொலை முயற்சி வழக்குகளில் குற்றவாளிகள், பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை டி.என்.ஏ., பகுப்பாய்வு வழியே கண்டறிதல் போன்ற பணிகளை செய்து வருகிறது.
மேலை நாடுகளில், மரபணு தொழில்நுட்பத்துடன், கணினி தொழில்நுட்பத்தையும் இணைத்ததன் வாயிலாக, அதன் திறன் பன்மடங்காக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கணினி வழி, டி.என்.ஏ., தேடல் தொழில்நுட்பம், இதுவரை உருவாக்கப்படவில்லை.தற்போது, தமிழக தடய அறிவியல் துறையின், டி.என்.ஏ., பிரிவில், 'தடய மரபணு தேடல்' என்ற மென்பொருள் உருவாக்கப்பட்டு உள்ளது.
இத்தொழில் நுட்பத்தை இந்தியாவில் அறிமுகம் செய்வதில், முதல் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.இந்த மென்பொருளை, நேற்று தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ரகுபதி, ராஜகண்ணப்பன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இப்புதிய மென்பொருள் வழியே, கடத்தப்பட்ட, காணாமல் போன குழந்தைகளை மரபணு ஒப்பீடு ஆய்வு வழியே, உரிய பெற்றோரிடம் ஒப்படைத்தல்; மாநிலங்களுக்கு இடையே செயல்படும் குற்றவாளிகளின் தொடர்பை கண்டறிதல். தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுவோர்; இயற்கை பேரிடர்களால் இறந்தவர்களை கண்டறிதல் போன்ற பணிகளை, மிக எளிதாக, துரிதமாக செய்ய இயலும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X