பொது செய்தி

தமிழ்நாடு

வருவாய் துறை காலியிடம் நிரப்ப வலியுறுத்தல்

Added : நவ 20, 2021
Share
Advertisement
மதுரை:'கிராம நிர்வாக அலுவலராக இருந்து பதவி உயர்வு பெற்ற முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பிர்க்கா பணியை ஓராண்டாக குறைக்க வேண்டும்,' என, தமிழ்நாடு வருவாய் துறை பதவி உயர்வு அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தியது.மதுரையில் சங்க மாநில பொது செயலர் ஜெய்கணேஷ் கூறியதாவது: பொதுமக்கள் நலன் கருதி பிர்க்கா அளவில் துணை தாசில்தார் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும். செட்டில்மென்ட்,

மதுரை:'கிராம நிர்வாக அலுவலராக இருந்து பதவி உயர்வு பெற்ற முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பிர்க்கா பணியை ஓராண்டாக குறைக்க வேண்டும்,' என, தமிழ்நாடு வருவாய் துறை பதவி உயர்வு அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தியது.

மதுரையில் சங்க மாநில பொது செயலர் ஜெய்கணேஷ் கூறியதாவது: பொதுமக்கள் நலன் கருதி பிர்க்கா அளவில் துணை தாசில்தார் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும். செட்டில்மென்ட், யு.டி.ஆர்., நத்தம் நிலவரி போன்ற திட்ட பணிகளில் ஏற்பட்ட பிழைகள் போன்ற பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காண வருவாய் தாசில்தார்களுக்கு அதிகாரம் வழங்கிட வேண்டும்.

மாநில அளவில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும். அரசின் மக்கள் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வருவாய் துறையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு பணியாளர்கள், ஆசிரியர்களின் நீண்டநாள் கோரிக்கையான புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X