கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மாணவர் இறந்த வழக்கு விசாரணை: டிச.,1ம் தேதிக்கு ஒத்தி வைப்பு

Added : நவ 20, 2021
Share
Advertisement
விழுப்புரம்:தனியார் பள்ளி மாணவர் இறந்த வழக்கு விசாரணையை டிசம்பர் 1ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ், 10; தனியார் பள்ளியில் பயின்ற இவர், 1999ல் சேலம் மாவட்டம் ஆத்துாரில் உள்ள வயல்வெளி பகுதியில் இறந்து கிடந்தார்.அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி மாணவரின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில்

விழுப்புரம்:தனியார் பள்ளி மாணவர் இறந்த வழக்கு விசாரணையை டிசம்பர் 1ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ், 10; தனியார் பள்ளியில் பயின்ற இவர், 1999ல் சேலம் மாவட்டம் ஆத்துாரில் உள்ள வயல்வெளி பகுதியில் இறந்து கிடந்தார்.அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி மாணவரின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

2016ல் இச்சம்பவம் தொடர்பாக விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்தனர். அதில், மாணவர் சுரேஷ், அவர் பயின்ற பள்ளி வளாகத்தில் இருந்த குடிநீர் தொட்டிக்குள் விழுந்து இறந்ததும், அதை மறைப்பதற்காக பள்ளி நிர்வாகம், உடலை, ஆத்துார் வயல்வெளி பகுதியில் வீசியதும் தெரிந்தது.இச்சம்பவம் தொடர்பாக, பள்ளி முதல்வர் பிரகாஷ், ஊழியர்கள் சின்னப்பன், மணிபாலன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.வழக்கு விசாரணையின்போது, சின்னப்பன், மணிபாலன் இறந்தனர். விசாரணையில் பள்ளி முதல்வர் பிரகாஷ் ஆஜராகவில்லை. சாட்சிகளிடம் விசாரணை நடத்துவதற்காக, விசாரணையை டிசம்பர் 1ம் தேதிக்கு ஒத்தி வைத்து, நீதிபதி கோபிநாதன் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X