கடலுாரில் 2வது நாளாக வடியாத வெள்ளம் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடலுாரில் 2வது நாளாக வடியாத வெள்ளம்

Added : நவ 20, 2021
Share
கடலுார்:கடலுார் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தால் தீவாக மாறிய கிராமங்கள் மற்றும் நகர் பகுதிகளில் தண்ணீர் வடியாமல் இரண்டாவது நாளாக மக்கள் தவிக்கின்றனர்.தென்பெண்ணையாற்று நீர்பிடிப்பு பகுதிகளிள் பெய்த கனமழை காரணமாக, கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரப்பள்ளி, கே.ஆர்.பி., அணைகளில் இருந்து நிரம்பிய 51 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. திருவண்ணாமலை
 கடலுாரில் 2வது நாளாக வடியாத வெள்ளம்

கடலுார்:கடலுார் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தால் தீவாக மாறிய கிராமங்கள் மற்றும் நகர் பகுதிகளில் தண்ணீர் வடியாமல் இரண்டாவது நாளாக மக்கள் தவிக்கின்றனர்.
தென்பெண்ணையாற்று நீர்பிடிப்பு பகுதிகளிள் பெய்த கனமழை காரணமாக, கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரப்பள்ளி, கே.ஆர்.பி., அணைகளில் இருந்து நிரம்பிய 51 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனுார் அணையில் ஷட்டர் பழுதானதால் திருக்கோவிலுார் அணைக்கட்டிற்கு நேரடியாக தண்ணீர் வந்தது.

அங்கு ஏற்கனவே நிரம்பியிருந்த நிலையில், நேற்று முன் தினம் காலை 1.10 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. கனமழையால் தென்பெண்ணையாற்றில் தண்ணீர் ஓடிய நிலையில், ஒரே நேரத்தில் 1.50 லட்சம் கன அடி தண்ணீர் கரைபுரண்டு வந்தது.
கடலுார் மாவட்டத்தில் 50 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர் வந்ததால், 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. பல கிராமங்கள் தீவாக மாறியுள்ளன. அதேபோல பண்ருட்டியில் துவங்கி கடலுார் வரையுள்ள 100க்கும் மேற்பட்ட நகர பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து, வீடுகளுக்குள் புகுந்தது. இரண்டாவது நாளாக நேற்றும் தண்ணீர் வடியாததால், மின்சாரம், குடிநீர் இல்லாமல் மக்கள் தவிப்பது தொடர்ந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X