பொது செய்தி

தமிழ்நாடு

காவல் துறை கட்டடங்கள் திறப்பு

Added : நவ 20, 2021
Share
Advertisement
சென்னை:தமிழகத்தில் 44.30 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள, காவல் மற்றும் சிறைத்துறை கட்டடங்களை, முதல்வர் ஸ்டாலின்நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக திறந்து வைத்தார்.சென்னை, நாகப்பட்டினம், மதுரை, சேலம், திருப்பத்துார், நீலகிரி, தென்காசி, திருவள்ளூர் மாவட்டங்களில், 44.30 கோடி ரூபாயில், 270 காவலர் குடியிருப்புகள், இரண்டு காவல் நிலையங்கள், இரண்டு காவல் துறை கட்டடங்கள், ஆறு உதவி
 காவல் துறை கட்டடங்கள் திறப்பு

சென்னை:தமிழகத்தில் 44.30 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள, காவல் மற்றும் சிறைத்துறை கட்டடங்களை, முதல்வர் ஸ்டாலின்நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக திறந்து வைத்தார்.
சென்னை, நாகப்பட்டினம், மதுரை, சேலம், திருப்பத்துார், நீலகிரி, தென்காசி, திருவள்ளூர் மாவட்டங்களில், 44.30 கோடி ரூபாயில், 270 காவலர் குடியிருப்புகள், இரண்டு காவல் நிலையங்கள், இரண்டு காவல் துறை கட்டடங்கள், ஆறு உதவி சிறை அலுவலர் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு, 3.57 கோடி ரூபாய் மதிப்பில், ஓட்டுனர்தேர்வு தளத்துடன் கூடிய அலுவலக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடங்களை, முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ரகுபதி, ராஜகண்ணப்பன், தலைமைச் செயலர் இறையன்பு, உள்துறை செயலர் பிரபாகர்,சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை இயக்குனர் சுனில்குமார் சிங், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X