பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகளுக்கான மாநில கொள்கை வெளியீடு

Added : நவ 20, 2021
Share
Advertisement
சென்னை:'தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை - 2021'ஐ, முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் வெளியிட்டார்.தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்புடன் வாழ்வதும், உரிமைகள் தடையின்றி கிடைப்பதும், அவர்கள் ஒருங்கிணைந்த வளர்ச்சி பெறுவதும் அவசியம்.இதை கருத்தில் வைத்தும், குழந்தைகளின் ஊட்டச்சத்து, கல்வி, மருத்துவம், பாலியல் பாகுபாடின்மை, பாதுகாப்பு ஆகிய அனைத்திற்குமான
 குழந்தைகளுக்கான   மாநில கொள்கை  வெளியீடு

சென்னை:'தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை - 2021'ஐ, முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் வெளியிட்டார்.
தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்புடன் வாழ்வதும், உரிமைகள் தடையின்றி கிடைப்பதும், அவர்கள் ஒருங்கிணைந்த வளர்ச்சி பெறுவதும் அவசியம்.இதை கருத்தில் வைத்தும், குழந்தைகளின் ஊட்டச்சத்து, கல்வி, மருத்துவம், பாலியல் பாகுபாடின்மை, பாதுகாப்பு ஆகிய அனைத்திற்குமான தனித்துவம் வாய்ந்த கொள்கையாக, 'தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை - 2021' வடிவமைக்கப்பட்டு உள்ளது.
அதில் கூறப்பட்டு உள்ளவை:
* 18 வயது நிரம்பாத அனைவரும் குழந்தைகள். அனைத்து குழந்தைகளுக்கும் பாகுபாடின்றி, உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அனைத்து விஷயங்களிலும், குழந்தைகள் தங்களின் கருத்துகளை வெளியிட உரிமை உண்டு
*ஆண், பெண் குழந்தைகள் பாதுகாப்பான சூழலில், தங்களின் முழுத் திறனையும் அடையும் வகையில், அவர்களின் வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும். நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை நிறைவேற்றுவது, குழந்தைகளின் ஒட்டுமொத்த மேம்பாட்டுக்கு அவசியம்
* வன்முறை, தவறாக நடத்தப்படுதல், சுரண்டலில் இருந்து பாதுகாப்பு; சுகாதாரம், கல்வி கிடைப்பதை உறுதி செய்தல். கருத்துகளை வெளிப்படுத்தும் குழந்தைகளுக்கு சூழலை ஏற்படுத்துதல் மட்டுமின்றி, எந்த ஒரு குழந்தையும் விடுபடாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கொள்கை கடைப்பிடிக்கப்படுவதையும், தமிழக அரசு உறுதி செய்யும்
* பள்ளி அளவில் எழும் புகார்களை விசாரிக்க, அனைத்து பள்ளிகளிலும் புகார் குழு அமைக்கப்படும். கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு, அருகாமை குழந்தைகள் பாதுகாப்பு குழு வலுப்படுத்தப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நிதி ஆதரவு திட்டத்தில் ரூ.1.37 கோடி உதவி



* தமிழகத்தில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த, 256 குழந்தைகளுக்கு, 12.80 கோடி; தாய் அல்லது தந்தையை இழந்த, 6,493 குழந்தைகளுக்கு, 194.79 கோடி என, மொத்தம் 6,749 குழந்தைகளுக்கு 207.59 கோடி ரூபாய், தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது
* பெற்றோர் இருந்தும் வறுமையால் பராமரிக்க இயலாத குழந்தைகளை, குடும்பங்களில் வைத்து பராமரிப்பதை ஊக்குவிக்கும் நிதி ஆதரவு திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இவற்றின்கீழ் 1,148 குழந்தைகளுக்கு, மாதம் 2,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 10 குழந்தைகளுக்கு 1.37 கோடி ரூபாய்க்கான காசோலையை, முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் வழங்கினார்

* சமூக நல இயக்குனரகத்தின் கீழ் உள்ள அலுவலகங்களில், பணியின் போது இறந்த 15 பேரின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில், பணி நியமன ஆணைகளை வழங்குவதன் அடையாளமாக, ஏழு பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் கீதாஜீவன், தலைமை செயலர் இறையன்பு, சமூக நலத்துறை முதன்மை செயலர் ஷம்பு கல்லோலிகர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X