'டைம்ஸ்' சதுக்கத்தில் தோன்றிய இளையராஜா

Updated : நவ 20, 2021 | Added : நவ 20, 2021
Share
Advertisement
நியூயார்க்:நியூயார்க்கின், 'டைம்ஸ்' சதுக்கத்தில் உள்ள பிரமாண்ட எல்.இ.டி., திரையில், இளையராஜாவின் விளம்பரம் திரையிடப்பட்டது.'இசைஞானி' என அழைக்கப்படும் இளையராஜா, ஏராளமான பாடல்களுக்கு இசையமைத்து உள்ளார். இந்தியாவில் உள்ள மூத்த இசையமைப்பாளர்களில் ஒருவரான இவருக்கு இந்தியாவில் மட்டுமின்றி, உலக முழுதும் ரசிகர்கள் உள்ளனர்.சமீபத்தில், 'ஸ்பாட்டிபை' என்ற செயலியில்
 'டைம்ஸ்' சதுக்கத்தில் தோன்றிய இளையராஜா

நியூயார்க்:நியூயார்க்கின், 'டைம்ஸ்' சதுக்கத்தில் உள்ள பிரமாண்ட எல்.இ.டி., திரையில், இளையராஜாவின் விளம்பரம் திரையிடப்பட்டது.
'இசைஞானி' என அழைக்கப்படும் இளையராஜா, ஏராளமான பாடல்களுக்கு இசையமைத்து உள்ளார். இந்தியாவில் உள்ள மூத்த இசையமைப்பாளர்களில் ஒருவரான இவருக்கு இந்தியாவில் மட்டுமின்றி, உலக முழுதும் ரசிகர்கள் உள்ளனர்.சமீபத்தில், 'ஸ்பாட்டிபை' என்ற செயலியில் இளையராஜாவின் பாடல்களும் சேர்க்கப்பட்டன.

இது தொடர்பாக வெளியான விளம்பரத்தில் இளையராஜா தோன்றுகிறார். அதில், ஸ்பாட்டிபை செயலியில் தன் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளது குறித்து தெரிவித்து, அதை அவர் விளம்பரம் செய்யும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஸ்பாட்டிபையுடன் இணைந்துள்ள இளையராஜாவை கவுரவிக்கும் விதமாக, நேற்று முன்தினம் இரவு அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் உள்ள பிரமாண்ட எல்.இ.டி.,விளம்பர திரையில்,அவர் குறித்து விளம்பரம் செய்யப்பட்டது. அதில் இளையராஜாவின் புகைப்படத்திற்கு மேல், 'இசையின் ராஜா இங்கே இருக்கிறார்' என, குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படங்களை, சமூக வலைதளங்களில் இளையராஜா பகிர்ந்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X