ஆந்திராவில் மழை, வெள்ளம் 24 பேர் பலி; 100 பேர் மாயம்

Added : நவ 20, 2021
Share
Advertisement
அமராவதி:ஆந்திராவில் பெய்த கன மழை காரணமாக நான்கு மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை பாதிப்புக்கு ௨௪ பேர் பலியாகிவிட்டனர்; 100க்கும் மேற்பட்டோரை காணவில்லை. ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் சென்னை அருகே கரையை கடந்தது. இதனால்
 ஆந்திராவில் மழை, வெள்ளம் 24 பேர் பலி; 100 பேர் மாயம்

அமராவதி:ஆந்திராவில் பெய்த கன மழை காரணமாக நான்கு மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை பாதிப்புக்கு ௨௪ பேர் பலியாகிவிட்டனர்; 100க்கும் மேற்பட்டோரை காணவில்லை.

ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் சென்னை அருகே கரையை கடந்தது. இதனால் ஆந்திராவில் பலத்த மழை பெய்தது. சித்துார், நெல்லுார், கடப்பா, அனந்தப்பூர் மாவட்டங்களில் கன மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுஉள்ளது.இந்த மாவட்டங்களில் பல ஏரிகள் உடைந்ததில், விவசாய நிலங்கள் நீரிழ் மூழ்கிஉள்ளன.


பாதை துண்டிப்பு


சித்துார் மாவட்டத்தில் நீலா நதியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தில் ஏராளமான ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்டன. இங்குள்ள கல்யாணி அணை நிரம்பியதால் மதகுகள் திறக்கப்பட்டதையடுத்து, சொர்ணமுகி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் திருமலை மற்றும் திருப்பதி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

திருமலையில் ஸ்ரீவாரி மெட்டு மார்க்கம் முழுதும் பாறைகளாலும், கற்களாலும் நிறைந்து உள்ளது. பல இடங்களில் பாதை துண்டிக்கப்பட்டு அருவி போல் நீர் கொட்டி வருகிறது. இந்த பாதையை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஒரு மாதம் தேவைப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


பிரதமர் உறுதி

கடப்பா மாவட்டம் சத்யவதி நதியின் அருகே நந்தலுாரில் மூன்று அரசு பஸ்கள் வெள்ளத்தில் சிக்கின. இதிலிருந்து 12 சடலங்கள் மீட்கப்பட்டன. அனந்தப்பூர் மாவட்டம் கத்ரி நகரில் மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில், மூன்று குழந்தைகள் உட்பட ஐந்து பேர் இறந்தனர். திருப்பதி, நெல்லுாரில் ஏழு பேர் இறந்ததையடுத்து, ஆந்திராவில் மழை, வெள்ள பலி 24ஆக அதிகரித்துள்ளது; 100க்கும் மேற்பட்டோரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்கிறது.

இதற்கிடையில் ஆந்திர முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, வெள்ள பாதிப்புகளை கேட்டறிந்தார். ஆந்திராவுக்கு தேவையான அனைத்து உதவி களையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக,முதல்வரிடம் உறுதி அளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X