பொது செய்தி

தமிழ்நாடு

ஐ.ஐ.டி., பட்டமளிப்பு விழா :உற்சாகப்படுத்தினார் சிந்து

Updated : நவ 20, 2021 | Added : நவ 20, 2021
Share
Advertisement
சென்னை:சென்னை ஐ.ஐ.டி.,யின் 58-வது பட்டமளிப்பு விழாவில், 1,962 மாணவர்கள் பட்டம் பெற்றனர். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து பங்கேற்றார்.தேசிய உயர்கல்வி நிறுவனமான சென்னை ஐ.ஐ.டி.,யின், 58 வது பட்டமளிப்பு விழா, 'ஆன் லைன்' வாயிலாக நேற்று நடந்தது. ஐ.ஐ.டி., இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி தலைமையில் நடந்த விழாவில், 1,962 பேர் பல்வேறு படிப்புகளில்
 ஐ.ஐ.டி., பட்டமளிப்பு விழா :உற்சாகப்படுத்தினார் சிந்து

சென்னை:சென்னை ஐ.ஐ.டி.,யின் 58-வது பட்டமளிப்பு விழாவில், 1,962 மாணவர்கள் பட்டம் பெற்றனர். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து பங்கேற்றார்.
தேசிய உயர்கல்வி நிறுவனமான சென்னை ஐ.ஐ.டி.,யின், 58 வது பட்டமளிப்பு விழா, 'ஆன் லைன்' வாயிலாக நேற்று நடந்தது. ஐ.ஐ.டி., இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி தலைமையில் நடந்த விழாவில், 1,962 பேர் பல்வேறு படிப்புகளில் பட்டங்கள் பெற்றனர். இதில், 399 பேர் பி.டெக்., - 379 பேர் இரட்டை பட்டப் படிப்பு, 366 பேர் எம்.டெக்., - 61 பேர் எம்.பி.ஏ., மற்றும் 311 பேர் பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்புக்கான பட்டங்கள் பெற்றனர். மற்றவர்கள் ஆன்லைன் வாயிலாக பட்டம் பெற்று, உறுதிமாழி எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சர்வதேச பேட்மின்டன் வீராங்கனை, சிந்து பேசியதாவது:நீங்கள் எவ்வளவோ சாதித்துள்ளீர்கள்; இன்னும்நிறைய சாதிக்க வேண்டும். இது முடிவல்ல; வாழ்வில் நிறைய கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. எனவே, உங்களின் கற்றல் முயற்சிகளை கைவிடாதீர்கள்.
வெற்றியானாலும், தோல்வியானாலும், முயற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும். கனவை, லட்சியத்தை நோக்கி நடைபோட வேண்டும். வெற்றிக்கு ஒழுக்கம் மற்றும் நேரம் தவறாமை முக்கியம். வெற்றிப் படிக்கல்லை தொட அர்ப்பணிப்பு உணர்வும், இலக்கை நிர்ணயிப்பதும் முக்கியம். என்னால் வெற்றி பெற முடிந்தது; உங்களாலும் முடியும்; தொடர்ந்து முயற்சியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
ஐ.ஐ.டி.,யின் நிர்வாக குழு தலைவர் பவன் கோயங்கா, டீன்கள் லிஜி பிலிப், பிரதாப் ஹரிதாஸ் மற்றும் பேராசிரியர்கள் விழாவில் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X