கோவை: மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த பேராசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில், கோவை அரசு கலைக் கல்லுாரியில் ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.கோவை அரசு கலைக்கல்லுாரியில், படிக்கும் மாணவி ஒருவருக்கு, பாலியல் துன்புறுத்தல் கொடுத்த துறை தலைவரான உதவிப் பேராசிரியர் ரகுநாதன், 42 கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், கல்லுாரியில் நேற்று ஆசிரியர்கள், கல்லுாரி நிர்வாகத்துடனான கூட்டம் நடந்தது. இதில் ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.கல்லுாரி முதல்வர் கலைசெல்வி கூறுகையில், ''ஆசிரியர்கள் மாணவ, மாணவியருடன் மொபைல்போனில் பேசக்கூடாது. வாட்ஸ்ஆப், உள்ளிட்ட சமூக வலைதளங்களில் உரையாடக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களை ஆசிரியர், துறை அலுவலகங்களுக்கு தனியாக வர அறிவுறுத்தக் கூடாது.எதுவாக இருந்தாலும், பொதுவான இடத்தில் பேச வேண்டும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மாணவ, மாணவியரை ஆசிரியர் அறைக்கு வரச் சொல்லும் போது தலா, இரு மாணவர்கள், மாணவியரை வரச்சொல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுதவிர, மாணவர்கள், அரசு விதித்துள்ள விதிகளின் படி, உடை அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE