கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஏற்காடு கூட்டுறவு பயிற்சி நிறுவனம் ரத்து செய்ததாக ஐகோர்ட்டில் தகவல்

Added : நவ 20, 2021
Share
Advertisement
சென்னை:சேலம் மாவட்டம் ஏற்காடு தாலுகா செம்மடுவு கிராமத்தில், மாநில அளவிலான கூட்டுறவு பயிற்சி நிறுவனம் அமைக்க வழங்கிய அனுமதியை ரத்து செய்திருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், அரசு தெரிவித்து உள்ளது.ஏற்காடு மலைவாழ் மக்கள் பெரும்பலநோக்கு கூட்டுறவு சங்கத் தலைவர் சென்ராயன் என்பவர் தாக்கல் செய்த மனு:ஏற்காடு தாலுகா செம்மடுவு கிராமத்தில், மாநில அளவிலான கூட்டுறவு

சென்னை:சேலம் மாவட்டம் ஏற்காடு தாலுகா செம்மடுவு கிராமத்தில், மாநில அளவிலான கூட்டுறவு பயிற்சி நிறுவனம் அமைக்க வழங்கிய அனுமதியை ரத்து செய்திருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், அரசு தெரிவித்து உள்ளது.
ஏற்காடு மலைவாழ் மக்கள் பெரும்பலநோக்கு கூட்டுறவு சங்கத் தலைவர் சென்ராயன் என்பவர் தாக்கல் செய்த மனு:ஏற்காடு தாலுகா செம்மடுவு கிராமத்தில், மாநில அளவிலான கூட்டுறவு பயிற்சி நிறுவனம் அமைக்க, 4.33 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.
பொதுப்பணித்துறை அளித்த செலவு மதிப்பீடு 61.80 கோடி ரூபாய்க்கு, அரசு நிர்வாக ஒப்புதல் வழங்கியது. முதல் தவணையாக, 2021 ஜனவரியில் 15 கோடி ரூபாய் விடுவிக்கப் பட்டது. இந்நிலையில், மறு உத்தரவு வரும் வரை, கட்டுமான பணிகளை நிறுத்தும்படி, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் பங்களிப்பாக 3.16 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.


விசாரணை

எந்த காரணமும் இன்றி, கட்டுமானப் பணிகளை நிறுத்த உத்தரவிட்டது சட்டவிரோதமானது. எனவே, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் சிறப்பு பிளீடர் ஏ.செல்வேந்திரன் ஆஜராகி, ''ஏற்காட்டில் கூட்டுறவு பயிற்சி நிறுவனம் அமைக்கும் திட்டத்தை, அரசு ரத்து செய்துள்ளது. அதற்கான உத்தரவு, நவம்பர் 9ல் பிறப்பிக்கப்பட்டுள்ளது,'' என்றார். உத்தரவின் நகலையும் தாக்கல் செய்தார்.
இதையடுத்து, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவு:ஏற்காட்டில் கூட்டுறவு பயிற்சி நிறுவனம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்வது என முடிவெடுத்து, புதிய உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.


தள்ளிவைப்பு

மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், கட்டுமான பணியின் நிலை மற்றும் எவ்வளவு பணம் செலவிடப்பட்டது என்பது குறித்து கேட்டுள்ளார்.அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யும்படி, நவ., 8ல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், தாக்கல் செய்யப் படவில்லை. அடுத்த வாரத்தில் தாக்கல் செய்வதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். விசாரணை 24க்கு தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X