துாய்மை நகரம் தரவரிசையில் பின் தங்கியது கோவை | Dinamalar

தமிழ்நாடு

துாய்மை நகரம் தரவரிசையில் பின் தங்கியது கோவை

Added : நவ 20, 2021
Share
கோவை: துாய்மை நகரங்களின் தரவரிசை பட்டியலில் கடந்தாண்டு, தமிழக அளவில் முதலிடம் பிடித்த கோவை மாநகராட்சி இவ்வாண்டு இரண்டாமிடத்துக்கு பின்தங்கியுள்ளது.மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், 2016 ல் , 'துாய்மை பாரதம்' இயக்ககம் துவக்கப்பட்டது.ஆண்டுதோறும் மக்களிடம் கருத்து, கள ஆய்வுகள் அடிப்படையில் நாடு முழுவதும் துாய்மை நகரங்கள் தர


கோவை: துாய்மை நகரங்களின் தரவரிசை பட்டியலில் கடந்தாண்டு, தமிழக அளவில் முதலிடம் பிடித்த கோவை மாநகராட்சி இவ்வாண்டு இரண்டாமிடத்துக்கு பின்தங்கியுள்ளது.மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், 2016 ல் , 'துாய்மை பாரதம்' இயக்ககம் துவக்கப்பட்டது.ஆண்டுதோறும் மக்களிடம் கருத்து, கள ஆய்வுகள் அடிப்படையில் நாடு முழுவதும் துாய்மை நகரங்கள் தர வரிசைப்படுத்தப்படுகின்றன. இதற்கென, சேவை, துாய்மை, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின், 6,000 மதிப்பெண்களுக்கு கணக்கிடப்பட்டு, 'ரேங்க்' வழங்கப்படுகிறது.இவ்வாண்டுக்கான 'ரேங்க்' பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.தேசிய அளவில் இந்துார்(மத்திய பிரதேசம்) 5618.14 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை தக்கவைத்துள்ளது.சூரத் நகர்(குஜராத்), 5559.21 பெற்று இரண்டாமிடம், விஜயவாடா (ஆந்திரா), 5368.37 பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளது. இவ்வரிசையில், 6,000க்கு, 2781.23 மதிப்பெண்களுடன் தமிழகத்தில் சென்னை முதலிடமும், தேசிய அளவில், 43வது இடமும் பிடித்துள்ளது.கோவை, 2308.41 மதிப்பெண்களுடன் தேசிய அளவில், 46வது இடமும், தமிழகத்தில் இரண்டாம் இடமும் பெற்றுள்ளது.மதுரை, 2207.59 மதிப்பெண்களுடன், 47வது இடமும், தமிழகத்தில் மூன்றாம் இடமும் பிடித்துள்ளது.கடந்தாண்டு, 2,337.11 மதிப்பெண் எடுத்து, கோவை மாநகராட்சி தேசிய அளவில், 40வது 'ரேங்க்' பெற்றது; தமிழக அளவில் முதலிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:மக்களுக்கு சரியான சேவை சென்றடைகிறதா என்பதை கண்டறியவே இப்பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. அதன்படி, கோவை மாநகராட்சி தற்போது தமிழக அளவில் இரண்டாம் இடத்துக்கு பின்தங்கியுள்ளது.கடந்தாண்டு மூன்றாம் இடத்தில் இருந்த சென்னை தற்போது முதலிடத்துக்கு முந்தியுள்ளது. காரணம், பல்வேறு திட்டங்களை அங்கு செயல்படுத்தி கண்காணித்துள்ளனர். இங்குபோதிய துாய்மை பணியாளர்கள் இருந்தும், குப்பையில்லா நகரம் என்ற சான்று இதுவரை பெறவில்லை. திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும், செயல்படுத்துவதில் சுணக்கம் நிலவுகிறது. பணிகளை மேற்பார்வையிடுவதிலும், அதிகாரிகளிடம் அலட்சியம் காணப்படுகிறது. அதுவே, நாம் பின்தங்குவதற்கு காரணம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X