அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்மார்ட் சிட்டி' திட்ட முறைகேடுகளை கண்டறிய சி.பி.ஐ., விசாரணை?

Updated : நவ 21, 2021 | Added : நவ 20, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
தமிழகத்தில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, முதல்வர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், அது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசு தயாராகி வருகிறது. இதனால், அ.தி.மு.க., 'மாஜி'க்கள் பலருக்கும் சிக்கல் வருகிறது. முதற்கட்டமாக, புகார் குறித்து விசாரிக்க அதிகாரிகள் குழுவை நியமித்து, மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்
ஸ்மார்ட் சிட்டி, முறைகேடு,  சி.பி.ஐ., விசாரணை?

தமிழகத்தில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, முதல்வர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், அது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசு தயாராகி வருகிறது. இதனால், அ.தி.மு.க., 'மாஜி'க்கள் பலருக்கும் சிக்கல் வருகிறது. முதற்கட்டமாக, புகார் குறித்து விசாரிக்க அதிகாரிகள் குழுவை நியமித்து, மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஆட்சியில், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம், சென்னை, கோவை மதுரை, தஞ்சாவூர், சேலம், வேலுார், திருப்பூர், துாத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி மற்றும் ஈரோடுமாநகராட்சிகளில் செயல்படுத்தப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாநகராட்சிக்கும், ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் வரை மத்திய அரசு நிதி வழங்குகிறது. அதற்கு இணையாக தமிழக அரசும் நிதி வழங்கி வருகிறது. திட்டத்தை நிறைவேற்ற தேர்வு செய்யப்பட்ட நகரங்களில், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், பூங்கா அமைத்தல் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னையில் இம்மாதம் 6ம் தேதி இரவு கன மழை பெய்தது. இதன் காரணமாக, நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. வீடுகளுக்குள்ளும் மழை நீர் தேங்கியதால், மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடந்த தி.நகர், மாம்பலம் பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் முறையாக நடக்காததே, இந்த பாதிப்புக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.




முதல்வர் புகார்


சமீபத்தில் வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின் அளித்த பேட்டி:
கடந்த ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் போட்டு, மத்திய அரசிடம் இருந்து பல கோடி ரூபாய் வாங்கி, என்ன செய்தனர் என்றே தெரியவில்லை. பணிகளில் முறைகேடு நடந்துள்ளது. பணிகளை முறையாக செய்யாததால், சென்னை தத்தளிக்கிறது. முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில், உள்ளாட்சி துறையில் எந்த பணிகளும் நடக்கவில்லை; கமிஷன் மட்டும் வாங்கியிருப்பது நன்றாக தெரிகிறது. மழை நீரை வெளியேற்றும் பணிகள் முடிந்த பின், விசாரணை கமிஷன் அமைக்கப்படும். எங்கு தவறு நடந்தது என்று கண்டறியப்பட்டு, நிச்சயமாக யார் குற்றவாளிகளோ, அவர்கள் தண்டிக்கப்படுவர். தவறு செய்த ஒப்பந்ததாரர்கள் மீதும் நட
வடிக்கை பாயும். இவ்வாறு அவர் கூறினார். முதல்வரின் இந்த குற்றச்சாட்டு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
முதல்வரின் குற்றச்சாட்டை, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி மறுத்தார். சென்னையில் ஏற்பட்ட பாதிப்பை திசை திருப்ப, தங்கள் மீது குற்றம் சுமத்துவதாக அவர் கூறினார்.




விசாரணை குழு



இந்நிலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக முதல்வர் கூறிய குற்றச்சாட்டை, மத்திய அரசு சீரியசாக எடுத்துக் கொண்டுள்ளது. ஏனெனில், இந்த திட்டம்
மத்திய அரசு கொண்டு வந்தது. எனவே, முதல்வரின் புகார் குறித்து விசாரிக்க, மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி, தன் அமைச்சக அதிகாரிகள் அடங்கிய குழுவை நியமித்துள்ளார்.இக்குழு விரைவில் தமிழகம் வந்து விசாரணை நடத்தி, அறிக்கை தர உள்ளது.

அந்த அறிக்கையில், முறைகேடு நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டால், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட, மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தயாராக உள்ளார். அவர் நேர்மையானவர் என்பதால், முறைகேட்டை ஏற்றுக்கொள்ள மாட்டார் என, அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தி.மு.க., புகாரை அடுத்து, மத்திய அரசு விசாரணை குழு அமைத்து, அதிரடி நடவடிக்கையில் இறங்குவது, அ.தி.மு.க., தலைமைக்கு மட்டுமின்றி, அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

- நமது நிருபர் -


Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
21-நவ-202122:38:21 IST Report Abuse
Vittalanand புதிஸ் திட்டங்கள் மற்றும் நடப்பு திட்டங்கள் எதுவுமே மக்களுக்காக இல்லை. தேவையில்லாமல் திட்டங்கள், நலத்திட்டங்கள் அறிவிக்காமல் குடிநீர் சளை மராமத்து மிசாரமே மட்டும் அரசு லவனித்தால் ப்போதும்.புலி தன் உணவையும் உடலையும் தானே பராமரிடத்துக்கொள்கிறது
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
23-நவ-202107:49:23 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்புலி உண்டியல் தட்டுன்னு காசு அடிச்சி பொங்கல், வெண்ணைன்னு சாப்பிட்டு கொழுக்குறதில்லை....
Rate this:
Cancel
E Mariappan -  ( Posted via: Dinamalar Android App )
21-நவ-202121:47:54 IST Report Abuse
E Mariappan இரண்டு கழகங்களும் ஊழல் கட்சிகள் என்று கூறி விட்டு ஊழல் கட்சி என்று தெரிந்தும் அதிமுகவுடன் கூட்டணி வைத்து பாஜக நம்பகத் தன்மையை இழந்து விட்டது
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
23-நவ-202107:50:13 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்அட ஒங்களுக்கும் இது தெரிஞ்சி போச்சா ?...
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
21-நவ-202117:17:42 IST Report Abuse
sankaseshan Lion சொல்லறது கரெக்ட் அம்மா மாட்டிக்கொண்டார் ,தண்டனை அனுபவித்தார் , கொலைஞர் விஞ்ஞான முறைப்படி கொள் ளை அடித்து தப்பித்தார் செர்டிபிகேட் வாங்கினார் திமுக காரன் என்றொல் சும்மாவா .
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
23-நவ-202107:53:34 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்// அம்மா மாட்டிக்கொண்டார் ,தண்டனை அனுபவித்தார் // அது எப்போ ?? - மாட்டிக்கிட்டார் சரி, தண்டனை எங்கே அனுபவிச்சாரு.. ஏ-1 ஆட்சி நடக்குதுன்னு சொன்ன கொள்ளைக் கூட்டத்தோட கமிஷன் கூட்டணி வெச்சி கையை தூக்கி காட்டி வோட்டு கேட்டாரே உங்க உத்தமராசா .. அவரை பத்தி ரெண்டு வார்த்தை பலம்மா ஊது சங்கு.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X