அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரயில்களை தனியார் மயமாக்க முயற்சிக்க கூடாது: ராமதாஸ்

Added : நவ 20, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை:'ரயில்களை தனியார் மயமாக்கும் முயற்சி தோற்றதாகவே இருக்கட்டும்; மீண்டும் அந்த முயற்சியை மத்திய அரசு துவங்கக் கூடாது' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:நாடு முழுதும் 109 வழித்தடங்களில், 151 ரயில்களை தனியார் மயமாக்க, மத்திய அரசு தீர்மானித்தது. அவற்றில், சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, மும்பை, டில்லி,
 ரயில்களை தனியார் மயமாக்க முயற்சிக்க கூடாது: ராமதாஸ்

சென்னை:'ரயில்களை தனியார் மயமாக்கும் முயற்சி தோற்றதாகவே இருக்கட்டும்; மீண்டும் அந்த முயற்சியை மத்திய அரசு துவங்கக் கூடாது' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:நாடு முழுதும் 109 வழித்தடங்களில், 151 ரயில்களை தனியார் மயமாக்க, மத்திய அரசு தீர்மானித்தது. அவற்றில், சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, மும்பை, டில்லி, கோல்கட்டா, ஜெய்ப்பூர், ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படும் 12 ரயில்கள். கன்னியாகுமரியில் இருந்து எர்ணாகுளத்திற்கு இயக்கப்படும் ரயில் என மொத்தம் 13 ரயில்களை தனியார் மயமாக்க, ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டிருந்தன.
எந்த நிறுவனமும் அந்த தடங்களில் ரயில்களை இயக்க முன்வரவில்லை.அகில இந்திய அளவில்,டில்லி மற்றும் மும்பையில் சில ரயில்களை மட்டும், ஐ.ஆர்.சி.டி.சி.,நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளது. தனியார் மயமாக்கப்பட இருந்த ரயில்களில், 95 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை ஏலம் எடுக்க, எந்த நிறுவனமும் முன்வரவில்லை. இது, ரயில்களை நம்பியிருக்கும் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. ரயில்களை தனியார் மயமாக்கும் முயற்சி தோல்வி அடைந்திருந்தாலும், அது தற்காலிகமானதே.
ரயில்கள் தனியார் மயமாக்கப்படும் வாய்ப்புகள், இன்னும் முழுமையாக விலகவில்லை. வருவாய் பகிர்வு நிபந்தனையை, மத்திய அரசு தளர்த்தினாலோ, பெரும்பான்மை ரயில்களை தனியார் மயமாக்க, மத்திய அரசு முன்வந்தாலோ, நிலைமை தலைகீழாக மாறிவிடும்.எனவே, ரயில்களை தனியார் மயமாக்கும் முயற்சி தோற்றதாகவே இருக்கட்டும். மீண்டும் அந்த முயற்சியை மத்திய அரசு துவங்கக் கூடாது.இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
22-நவ-202104:17:00 IST Report Abuse
J.V. Iyer 'ரயில்களை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிடக்கூடாது. நல்லவற்றிற்கு நமது ஆதரவு எப்போதும்.
Rate this:
Cancel
rajan - erode,இந்தியா
21-நவ-202123:18:58 IST Report Abuse
rajan ரயில்களை தனியார் மயமாக்கக்கூடாது என்று பாராளுமன்றத்தில் அன்புமணி பேசுவாரா எதிர்த்து ஒட்டு போடுவாரா
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
21-நவ-202118:46:26 IST Report Abuse
jagan அரசிடம் தான் இருகோணும் அப்போ தான் நாங் கல் வீசி நாசம் செய்ய முடியும். -இப்படிக்கு மரம் வெட்டி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X