அரசியல் செய்தி

தமிழ்நாடு

'அம்மா மருந்தகங்கள் மூடப்படவில்லை'

Updated : நவ 20, 2021 | Added : நவ 20, 2021
Share
Advertisement
சென்னை:'அம்மா மருந்தகங்களை தமிழக அரசு மூடி வருவதாக, எதிர்க்கட்சி தலைவர் கூறியிருப்பது பொய்யான குற்றச்சாட்டு' என, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, கூட்டுறவு சங்கங்கள் சார்பில் நடத்தப்பட்டு வரும், 'அம்மா' மருந்தகங்களை, தமிழக அரசு மூடி வருவதாக, முற்றிலும் தவறான குற்றச்சாட்டை சுமத்தி

சென்னை:'அம்மா மருந்தகங்களை தமிழக அரசு மூடி வருவதாக, எதிர்க்கட்சி தலைவர் கூறியிருப்பது பொய்யான குற்றச்சாட்டு' என, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, கூட்டுறவு சங்கங்கள் சார்பில் நடத்தப்பட்டு வரும், 'அம்மா' மருந்தகங்களை, தமிழக அரசு மூடி வருவதாக, முற்றிலும் தவறான குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார்.கூட்டுறவு சங்கங்கள் சார்பில், தமிழக அரசு 131 அம்மா மருந்தகங்களையும் 174 கூட்டுறவு மருந்தகங்களையும் நடத்தி வருகிறது. ஏற்கனவே இயங்கி வந்த, அம்மா மருந்தகங்கள் எதுவும் மூடப்படவில்லை. மாறாக அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இயங்கி வந்த, அம்மா மருந்தகங்களின் எண்ணிக்கை 126ல் இருந்து 131 ஆக அரசால் உயர்த்தப்பட்டுள்ளது.கூட்டுறவு சங்கங்கள் சார்பில் நடத்தப்படும் மருந்தகங்கள் அனைத்தும், 20 சதவீதம் வரை தள்ளுபடி விலையில், மருந்து மாத்திரைகளை, விற்பனை செய்து வருகின்றன. மேலும், ஆண்டுக்கு 60 புதிய மருந்தகங்கள் என்ற அடிப்படையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 300 புதிய கூட்டுறவு மருந்தகங்களை, புதிதாக துவக்க முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில், நிர்ணயிக்கப்பட்ட 60 என்ற எண்ணிக்கையை விடக் கூடுதலாக, 75 மருந்தகங்கள், தமிழகம் முழுதும், பல்வேறு மாவட்டங்களில் துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அம்மா மருந்தகங்களில், நடப்பாண்டு அக்., 31 வரை, 44.88 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது. அதேபோல், 174 கூட்டுறவு மருந்தகங்கள் வழியே 48.21 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


'அம்மா' மருந்தகங்களை மூடக்கூடாது : பழனிசாமி வலியுறுத்தல்


'அம்மா மருந்தகங்களை மூடும் முடிவை அரசு கைவிட்டு அவற்றை தொடர்ந்து நடத்த வேண்டும்' என தமிழக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றத் தெரியாத அரசு நிதி பற்றாக் குறையை காரணம் காட்டி ஜெயலலிதா அரசால் நிறைவேற்றப்பட்ட பல மக்கள் நலத் திட்டங்களுக்கு மூடு விழா கண்டு வருகிறது.அம்மா உணவகம், அம்மா சிமென்ட், அம்மா குடிநீர், அம்மா மினி கிளினிக், தாலிக்கு தங்கம் திட்டம் என இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

அந்த வரிசையில் அம்மா மருந்தகங்களுக்கும் மூடு விழா நடத்த அரசு முடிவு செய்து உள்ளதாக செய்திகள் வருகின்றன.மக்கள் நல அரசு என்றால் மக்களின் நலனை காக்கும் அரசு. இந்த அரசோ மக்களின் நலத்திட்டங்களை பறிக்கும் அரசாக உள்ளது.தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததுடன் ஜெயலலிதா அரசு ஏற்கனவே நிறைவேற்றிய மக்கள் நலத் திட்டங்களுக்கு மூடுவிழா செய்தது போல நிதிச்சுமையை காரணம் காட்டி அம்மா மருந்தகங்களையும் மூட முடிவு செய்துள்ளது.
இது தனியார் மருந்தகங்கள் லாபம் கொழிக்க அனுமதிக்கும் செயல். இந்த முடிவை அரசு உடனே கைவிட வேண்டும்; இல்லையேல் பாதிக்கப்படும் மக்கள் கொதித்தெழுவர். இவ்வாறு பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X