பொது செய்தி

தமிழ்நாடு

மீன்வளம் பாதுகாப்போம்; வாழ்வை வளமாக்குவோம்

Updated : நவ 21, 2021 | Added : நவ 20, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்--ஆண்டுதோறும் நவ.,21 உலக மீன்வள தினமாகும். இதனை மீனவர் தினமாகவும் கடைபிடிக்கின்றனர். ஆரோக்கியமான கடல் சூழலின் முக்கியத்துவத்தையும், மீன்வளத்தை பாதுகாத்து, அவற்றை பெருக்கவும், மீனவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது இந்நாளின் நோக்கமாகும். ராமநாதபுரம் மாவட்டம்தமிழகத்திலேயே மிக நீண்ட கடற்கரையை கொண்டது. இங்கு விவசாயத்திற்கு அடுத்து பிரதான தொழிலாக
 மீன்வளம் பாதுகாப்போம்; வாழ்வை வளமாக்குவோம்

ராமநாதபுரம்--ஆண்டுதோறும் நவ.,21 உலக மீன்வள தினமாகும். இதனை மீனவர் தினமாகவும் கடைபிடிக்கின்றனர்.

ஆரோக்கியமான கடல் சூழலின் முக்கியத்துவத்தையும், மீன்வளத்தை பாதுகாத்து, அவற்றை பெருக்கவும், மீனவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது இந்நாளின் நோக்கமாகும். ராமநாதபுரம் மாவட்டம்தமிழகத்திலேயே மிக நீண்ட கடற்கரையை கொண்டது. இங்கு விவசாயத்திற்கு அடுத்து பிரதான தொழிலாக மீன்பிடி தொழில் உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், அழகன்குளம், தொண்டி ஆகிய கடற்கரையில் மீன்கள் அதிகளவில் கிடைக்கிறது.

இவ்விடங்களில் பிடிக்கப்படும் மீன்கள் அதிகளவில் வெளிநாடு, மாநிலங்களுக்கு கொண்டுசெல்லப்படுகிறது. குறிப்பாக துாத்துக்குடி கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள தனியார்தொழிற்சாலைகளில் சுத்தப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றனர். மீன்வளம் சுரண்டல்அதிகப்படியான மீன்பிடிப்பு என்பது திரும்பவும் மீட்டெடுக்க முடியாத அளவிற்கு மீன்பற்றாக்குறையை ஏற்படுத்துவதாகும். இது கடலின் சமநிலையையும் மதிப்புமிக்க உணவு மற்றும் வருமானத்திற்கான வளங்களை இழப்பதற்கு சமமாகும். மீன்பிடி வலைகளின் அதிகளவு பயன்பாடு காரணமாக சிறிய நண்டுகள், இறால்கள், மெல்லுடலிகள்,ஆமைகளின் குஞ்சுகள், மீன்குஞ்சுகள் மொத்த மீன்களில் 40 சதவீதம்வரை உணவுக்கு பயன்படாத வகையில் அழிக்கப்படுகிறது. கடல்வளம் மற்றும் பவளப்பாறைகளுக்கான சுற்றுச்சூழலை சிதைக்கின்றன.

ஆகையால் அழிவை ஏற்படுத்தும் இரட்டைமடி, சுறுக்குமடி, வெடிவைத்து மீன்பிடித்தல் கூடாது. இச்செயல்கள் கடல் மீன்வளம் பாதிக்கப்பட்டு, உணவு உற்பத்தியில் மீனவர்களின் லாபத்தையும் குறைத்து விடுகிறது. மீன்பிடிப்பவர் கடைபிடிக்க வேண்டியவை: மீனவர்கள் எங்கு எந்த இடத்தில் மீன்பிடிக்கிறோம் என்பதை அறிந்திருக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட இடங்கள் மற்றும் மிகச்சிறிய நுண்மீன் குஞ்சுகளை பிடிக்க கூடாது. சிறிய கண் உடைய வலைகளை பயன்படுத்த கூடாது. மீன்பிடிப்பில் உள்ளூர் சட்டதிட்டங்களை பின்பற்ற வேண்டும்.வாக்கி டாக்கி கருவியை கொண்டு செல்ல வேண்டும். கருவியை சேதப்படுத்துவதோ, தேவையற்ற காரணங்களுக்காக பயன்படுத்தவோ கூடாது, எப்போதும் 'சுவிட்ச் ஆன்' செய்திருக்க வேண்டும். ஆண்டுதோறும் கருவியின் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். படகில் செல்லும் தொழிலாளர்களுக்கு கருவியை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். மீனவர்கள் நலன்பாதுகாக்க வேண்டும்மீன்பிடி தொழிலில் பாதுகாப்பின்மை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

உயிரைப் பணயம் வைத்து கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வோர், புயல், சூறைக்காற்று, கடல்சீற்றம் போன்றவற்றால் பாதி நாட்களுக்கு மேல் தொழிலுக்கு செல்லமுடியாமல் பாதிக்கப்படுகின்றனர். கடல் பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு புயல், மழை நேரத்தில் தகவல்களைப் பரிமாற உபகரணங்கள் இல்லை எனவும் மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.ராமநாதபுரம் கடல் தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.,) மாவட்டச்செயலாளர் கருணாமூர்த்தி: மாவட்டத்தில் 1800 விசைப்படகுகள், 130 கிராம மக்கள் நாட்டுபடகுகள் மூலம் பாரம்பரிய முறையில் ஒருலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுஉள்ளனர். அரசால் தடைசெய்ய இரட் டைமடி மீன்பிடிப்பால் மீன்வளம் பாதிக்கப்படு கிறது. பாக்ஜலசந்தி பகுதியில் ஆழம் குறைந்த பகுதிகளில் 150 குதிரைதிறனுக்குமேல் உள்ள இன்ஜின் விசைப் படகுகளில் மீன்பிடிக்க தடைவிதிக்க வேண்டும். இவர்களை ஆழமான பகுதியில் மட்டுமே அனுமதிக்க வேண்டும். கடலிலிருந்து 9கி.மீ., துாரம் தள்ளி செல்லாமல்கரைப்பகுதியில் மீன்பிடிப்பதால் பாரம்பரிய மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

ஏற்றுமதி நிறுவனங்கள் தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்து மீன்களை குறைவாக விலைக்கு வாங்குகின்றனர். ஆகையால் அடிப்படை கொள்முதல் விலையில் வழங்க மறுக்கும் ஏற்றுமதி நிறுவனங்களின் உரிமத்தை ரத்துசெய்ய வேண்டும். டீசல் விலை உயர்வால் விசைபடகு, நாட்டுபடகுகள் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 50 சதவீதம் மானியத்தில் டீசல் வழங்க வேண்டும். மீன்வளத்தையும், பராம்பரிய மீனவர்கள் நலனை காக்க மீன்பிடி தொழில் சட்டங்களை மீறுபவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றார்.---------------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X