சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுரபி நர்ஸிங் கல்லுாரிக்கு சீல் தாளாளரை தேடுது போலீஸ்

Added : நவ 20, 2021
Share
Advertisement
திண்டுக்கல்:திண்டுக்கல் அருகே மாணவியருக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரை யொட்டி சுரபி நர்ஸிங் கல்லுாரிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் லதா முன்னிலையில் 'சீல்' வைக்கப்பட்டது. தலைமறைவான தாளாளர் ஜோதிமுருகனை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.திண்டுக்கல் -- பழநி சாலையில் முத்தனம்பட்டியில் சுரபி நர்ஸிங் கல்லுாரி உள்ளது. இதன் தாளாளர் ஜோதிமுருகன் 42, மாணவிகளுக்கு பாலியல்
 சுரபி நர்ஸிங் கல்லுாரிக்கு சீல்  தாளாளரை தேடுது போலீஸ்

திண்டுக்கல்:திண்டுக்கல் அருகே மாணவியருக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரை யொட்டி சுரபி நர்ஸிங் கல்லுாரிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் லதா முன்னிலையில் 'சீல்' வைக்கப்பட்டது. தலைமறைவான தாளாளர் ஜோதிமுருகனை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் -- பழநி சாலையில் முத்தனம்பட்டியில் சுரபி நர்ஸிங் கல்லுாரி உள்ளது. இதன் தாளாளர் ஜோதிமுருகன் 42, மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறி நேற்று முன்தினம் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தாடிக்கொம்பு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் உடந்தையாக இருந்த விடுதி காப்பாளர் அர்ச்சனாவை கைது செய்தனர். தாளாளர் ஜோதிமுருகன் தலைமறைவானார்.


கல்லுாரிக்கு சீல்

மாவட்ட வருவாய் அலுவலர் லதா தலைமையில் டி.ஐ.ஜி., விஜயகுமாரி விடுதியில் தங்கியுள்ள மாணவிகள் , பெற்றோரிடம் நேற்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ''தாளாளர் ஜோதிமுருகன் விரைவில் கைது செய்யப்படுவார். அதன்பின் விசாரணை குழு அமைத்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்'' என, உறுதியளித்தனர். இதனை ஏற்று மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் கல்லுாரிக்கு தற்காலிகமாக 'சீல்' வைக்கப்பட்டது.தனிப்படை அமைப்புதாளாளர் ஜோதிமுருகனை பிடிக்க தனிப்பிரிவு எஸ்.ஐ., மாரிமுத்து, இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் தலைமையில் ஒரு தனிப்பிரிவு என 5 தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X