பொது செய்தி

தமிழ்நாடு

போதிய வடிகால் வசதியின்றி மழை நீர் வீணடிப்பு

Added : நவ 20, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்-மாவட்டத்தில் தொடர் மழைபெய்தும், நகர், கிராமப் பகுதிகளில் போதிய வடிகால் வசதியின்றி மழைநீர் தேங்கி வீணாகிறது. வரத்து வாய்க்கால்களும் பராமரிக்கப்படாத காரணத்தினால் பெரும்பாலான ஊரணிகள் நிரம்பவில்லை. 30 முதல் 60 சதவீத அளவே தண்ணீர் உள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கீழ் 641கண்மாய்கள், ஊரகவளர்ச்சி துறையின்கீழ் 1122 சிறுபாசன கண்மாய்கள், 3897

ராமநாதபுரம்-மாவட்டத்தில் தொடர் மழைபெய்தும், நகர், கிராமப் பகுதிகளில் போதிய வடிகால் வசதியின்றி மழைநீர் தேங்கி வீணாகிறது. வரத்து வாய்க்கால்களும் பராமரிக்கப்படாத காரணத்தினால் பெரும்பாலான ஊரணிகள் நிரம்பவில்லை. 30 முதல் 60 சதவீத அளவே தண்ணீர் உள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கீழ் 641கண்மாய்கள், ஊரகவளர்ச்சி துறையின்கீழ் 1122 சிறுபாசன கண்மாய்கள், 3897 ஊரணிகள் என மொத்தம்5660 நீர்நிலைகள் உள்ளன. பெரும்பாலான கிராமங்களில் காவிரி கூட்டுகுடிநீர் சரிவர வராததால் மக்கள் அன்றாட தேவைக்கும், கால்நடைகள் தாகத்திற்கும் அப்பகுதியில் உள்ள ஊரணி தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலைமையில் தற்போது வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதுவரை 15 கண்மாய்கள், 4 ஊரணிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. 90 கண்மாய்கள், 52 ஊரணிகளில் 80 சதவீதம் தண்ணீர் உள்ளது. 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊரணிகள் நிரம்பவில்லை. நகர், ஊராட்சி பகுதிகளில் போதிய வடிகால் வசதியின்றி மழைநீர் தாழ்வான நிலங்கள், ரோட்டில் தேங்கி வீணானது.வரத்து வாய்க்கால்களும் பராமரிக்கப்படாத காரணத்தினால் பெரும்பாலான ஊரணிகள் நிரம்பாமல் குறைந்தஅளவே தண்ணீர் உள்ளது. இந்த ஊரணிகளை கண்டறிந்து, வரத்து வாய்க்கால்வாய்களை செப்பனிட்டும், நீர்பிடிப்பு பகுதிகளில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றி, மழைநீரை முழுமையாக சேமிக்க மாவட்டநிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X