கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஷிபா கோல்டன் சிட்டி நில மோசடி வழக்கு: முகமதுஷாபி, மனைவி ஆஜராக உத்தரவு

Added : நவ 20, 2021
Share
Advertisement
திருநெல்வேலி:நிலமோசடி வழக்கில் ஷிபா கோல்டன் சிட்டி நிறுவன உரிமையாளர் முகமதுஷாபி, மனைவி ஆயிஷா தவுலத் உள்ளிட்டோர் நாளை நிலஅபகரிப்பு தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.திருநெல்வேலியை சேர்ந்த எம்.கே.எம்.முகமதுஷாபி, அவரது மனைவி ஆயிஷா தவுலத் ஆகியோர் 2006ல் கொங்கந்தான்பாறையில் 18 ஏக்கர் நிலத்தில் ஷிபா கோல்டன் சிட்டி என்ற பெயரில் 333 தனி வீடுகள்

திருநெல்வேலி:நிலமோசடி வழக்கில் ஷிபா கோல்டன் சிட்டி நிறுவன உரிமையாளர் முகமதுஷாபி, மனைவி ஆயிஷா தவுலத் உள்ளிட்டோர் நாளை நிலஅபகரிப்பு தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
திருநெல்வேலியை சேர்ந்த எம்.கே.எம்.முகமதுஷாபி, அவரது மனைவி ஆயிஷா தவுலத் ஆகியோர் 2006ல் கொங்கந்தான்பாறையில் 18 ஏக்கர் நிலத்தில் ஷிபா கோல்டன் சிட்டி என்ற பெயரில் 333 தனி வீடுகள் திட்டத்தை துவக்கினர்.

இவர்கள் தேர்வு செய்த நிலம் அம்பாசமுத்திரம் வி.எஸ்.,வேலாயுதம் டிரஸ்ட்டியாக உள்ள சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி ஆடித்தபசு 11ம் மண்டகப்படி உள்ளிட்ட மூன்று டிரஸ்ட்களுக்கு சொந்தமானதாகும்.2006ல் வி.எஸ்.வேலாயுதத்திடம் முகமது ஷாபி தரப்பினர் ஷிபா கோல்டன் சிட்டிக்காக 18 ஏக்கர் நிலத்தை விற்பனைக்கு கேட்டனர். டிரஸ்ட் நிலத்தில் கல்வி நிறுவனம் துவக்கப்போவதாக கூறி விற்பனைக்கு தர மறுத்தார்.

ஆனால் முகமதுஷாபி தரப்பினர் போலியான ஆவணங்கள் தயாரித்து வேறு நபர்களிடம் இருந்து வாங்கியது போல 18.31 ஏக்கர் நிலத்தை மேலப்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்துகொண்டனர். பின்னர் வீடுகளை கட்டி விற்பனை செய்தனர்.
திருநெல்வேலி 1வது கூடுதல் நீதிமன்றத்தில் 2010ல் வி.எஸ்.வேலாயுதம் நில மோசடி குறித்து வழக்குதொடர்ந்தார். ஷிபா கோல்டன் சிட்டியில் வீடு வாங்கிய கணபதிராமன், தமது வீடு இருக்கும் நிலம் மோசடியாக பெறப்பட்டிருப்பதை அறிந்து முகமது ஷாபி, அவரது மனைவி ஆயிஷா மற்றும் நிலம் விற்பனை செய்தவர்கள் மீது 2016 ஜூன் 20ல் திருநெல்வேலி நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார்.
போலீசார் முகமதுஷாபி, ஆயிஷா தவுலத், தாழையூத்து சார்லஸ், கோட்டூர் ரோடு அண்ணாமலை, வெங்கடாத்ரிநகர் அப்துல்கரீம், கொங்கந்தான்பாறை ஊராட்சி தலைவர் ஆகியோர் மீது மோசடி உள்பட 4 பிரிவுகளில் வழக்குபதிவு செய்தனர்.
வழக்கு விசாரணைக்கு பிறகு தற்போதுமுகமதுஷாபி, ஆயிஷா தவுலத், சார்லஸ், அண்ணாமலை, அப்துல்கரீம், ஆல்பிரட், பாலகிருஷ்ணன், பால்ராஜ், அருணாசலம், எட்வர்ட் புல்தாஸ் மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

இதனிடையே முகமதுஷாபி, அவரது மனைவி ஆயிஷா தவுலத் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமின் பெற்றுள்ளனர்.இந்நிலையில் நாளை ஆஜராகும்படி முகமதுஷாபி, ஆயிஷாதவுலத் உள்ளிட்டோருக்கு திருநெல்வேலி நிலஅபகரிப்பு தடுப்பு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X