அரசு பள்ளி மைதானம் சீரமைக்க பெற்றோர் கோரிக்கை| Dinamalar

அரசு பள்ளி மைதானம் சீரமைக்க பெற்றோர் கோரிக்கை

Added : நவ 20, 2021 | |
சாயல்குடி--சாயல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம், மைதானம் புதர் மண்டி காணப்படுகிறது.நேற்று காலை 10:00 மணிக்கு இரண்டு பாம்புகள் பள்ளி வகுப்பறையில் புகுந்தது. மாணவிகள் அலறினர். சாயல்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் பொன்னையா தலைமையிலான வீரர்கள்இரண்டு பாம்புகளையும் பிடித்து செவல்பட்டி வனப்பகுதியில் விட்டனர்.மாணவிகளின் பெற்றோர் கூறியதாவது:இங்குள்ள அரசு பள்ளி

சாயல்குடி--சாயல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம், மைதானம் புதர் மண்டி காணப்படுகிறது.நேற்று காலை 10:00 மணிக்கு இரண்டு பாம்புகள் பள்ளி வகுப்பறையில் புகுந்தது. மாணவிகள் அலறினர். சாயல்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் பொன்னையா தலைமையிலான வீரர்கள்இரண்டு பாம்புகளையும் பிடித்து செவல்பட்டி வனப்பகுதியில் விட்டனர்.மாணவிகளின் பெற்றோர் கூறியதாவது:இங்குள்ள அரசு பள்ளி மைதானம் புதர் மண்டி காணப்படுகிறது. மாணவிகள் விளையாட கூட முடியவில்லை. மைதான பராமரிப்புக்கு ஒதுக்கப்படும் நிதி கூட பயன்படுத்தப்படாமல் நிர்வாகத்தினர் உள்ளனர்.கல்வித்துறை அதிகாரிகள் மாணவிகளின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கவும், மைதானத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X