போலீசாருக்கு மூன்று டிராக்டர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போலீசாருக்கு மூன்று டிராக்டர்கள்

Added : நவ 20, 2021
Share
சபரிமலை:சபரிமலையில் போலீசாருக்கு தேவையான பொருட்கள் பம்பையில் இருந்து சன்னிதானம் கொண்டு செல்ல 3 டிராக்டர்கள் வாங்கப்பட்டுள்ளன.சபரிமலையில் பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு தலைசுமை, கழுதை மூலம் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. இதில் சிரமங்கள் ஏற்பட்டதாலும், அவசரத்துக்கு பொருட்கள் கொண்டு வர முடியாத நிலை இருந்ததாலும் பிரத்யேகமாக வடிவமைக்கப் பட்ட டிராக்டர்கள்

சபரிமலை:சபரிமலையில் போலீசாருக்கு தேவையான பொருட்கள் பம்பையில் இருந்து சன்னிதானம் கொண்டு செல்ல 3 டிராக்டர்கள் வாங்கப்பட்டுள்ளன.
சபரிமலையில் பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு தலைசுமை, கழுதை மூலம் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. இதில் சிரமங்கள் ஏற்பட்டதாலும், அவசரத்துக்கு பொருட்கள் கொண்டு வர முடியாத நிலை இருந்ததாலும் பிரத்யேகமாக வடிவமைக்கப் பட்ட டிராக்டர்கள் பயன்படுத்தப்பட்டன.
டிராக்டரில் முன்பக்கமும், பின் பக்கமும் பொடருட்கள் ஏற்றும் வகையில் இரண்டு இரும்பு பெட்டிகள் பொருத்தப்பட்டு நடுவில் டிரைவர் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சபரிமலை சன்னிதானத்துக்கு தேவையான பொருட்கள், பூஜைகளுக்காக பொருட்களும் இதில் கொண்டு செல்லப்படுகிறது.இதுவரை தனியார் மட்டுமே அனுமதி பெற்று இந்த டிராக்டர்களை இயக்கி வந்தனர்.

தற்போது போலீஸ் துறை சார்பில் மூன்று டிராக்டர்கள் வாங்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதை ஓட்டுவற்கு திருச்சூர் போலீஸ் அகாடமியில் உள்ள 48 போலீஸ் டிரைவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
தற்போது போலீஸ் உணவகத்துக்கு தேவையான பொருட்கள், பணிக்கு வரும் போலீசாரின் லக்கேஜ்கள் அனைத்தும் இந்த டிராக்டரில் கொண்டு வரப்படுகிறது. எனினும் டிராக்டரில் ஆட்கள் சென்றுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X