தெரு நாய்கள் தொந்தரவால்பொதுமக்கள் பாதிப்பு

Added : நவ 20, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்,--ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவற்றின் தொந்தரவால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.ராமநாதபுரத்தில் தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த தடுப்பூசி இடப்படாத காரணத்தினால் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ராமேஸ்வரம் ரோடு, மதுரை ரோடு, பஸ் ஸ்டாண்ட், கேணிக்கரை ரோடு, அரண்மனை பகுதி உள்ளிட்ட

ராமநாதபுரம்,--ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவற்றின் தொந்தரவால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.ராமநாதபுரத்தில் தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த தடுப்பூசி இடப்படாத காரணத்தினால் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ராமேஸ்வரம் ரோடு, மதுரை ரோடு, பஸ் ஸ்டாண்ட், கேணிக்கரை ரோடு, அரண்மனை பகுதி உள்ளிட்ட போக்குவரத்து மிகுந்த இடங்களில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இவற்றால் போக்குவரத்து பாதிப்படுகிறது, சிலநேரங்களில் விபத்தும் நடக்கிறது. நாய்கள் தொந்தரவால் இரவுநேரத்தில் பெண்கள், சிறுவர்கள் ரோட்டில் நடந்துசெல்ல அச்சப்படுகின்றனர்.நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த உள்ளாட்சிநிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X