சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேனி மருத்துவ இணை இயக்குனர் மீது புகார்

Added : நவ 20, 2021
Share
Advertisement
பெரியகுளம்:ஓமியோபதி மருத்துவமனை நடத்த மாதம் ரூ.20 ஆயிரம் கொடுக்க வேண்டும் என தேனி மருத்துவ இணை இயக்குனர் லட்சுமணன் கேட்டதால், தனது கணவர் சீனிவாசன் 50, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக மனைவி சாந்தி 41, போலீசில் புகார் அளித்துள்ளார்.தேனி மாவட்டம்,பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் என்.ஆர்.டி.,தெருவை சேர்ந்த ஓமியோபதி டாக்டர் ஜி.சீனிவாசன் 50. இவரது வீட்டின் தரை தளத்தில் 'எலக்ரோ

பெரியகுளம்:ஓமியோபதி மருத்துவமனை நடத்த மாதம் ரூ.20 ஆயிரம் கொடுக்க வேண்டும் என தேனி மருத்துவ இணை இயக்குனர் லட்சுமணன் கேட்டதால், தனது கணவர் சீனிவாசன் 50, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக மனைவி சாந்தி 41, போலீசில் புகார் அளித்துள்ளார்.
தேனி மாவட்டம்,பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் என்.ஆர்.டி.,தெருவை சேர்ந்த ஓமியோபதி டாக்டர் ஜி.சீனிவாசன் 50. இவரது வீட்டின் தரை தளத்தில் 'எலக்ரோ ஓமியோபதி கிளினிக்' நடத்தினார். நேற்று காலை கிளினிக்கில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.மனைவி சாந்தி தென்கரை போலீசில் அளித்த புகார்:

சில மாதங்களுக்கு முன் எங்கள் கிளினிக்கிற்கு பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவ மனை இணை இயக்குனர் லட்சுமணன் வந்து,கிளினிக் நடத்துவதில் நிறைய குறைபாடுகள் உள்ளது, அதனை சரி செய்து கொள்ள மாதம் ரூ.20 ஆயிரம் கொடுக்க வேண்டும். இல்லையெனில் சீல் வைத்து விடுவதாக' கூறி சென்றார்.

பயந்த கணவர் ரூ. 20 ஆயிரம் வழங்கினார். ஒவ்வொரு மாதமும் 5 ம் தேதிக்குள் ரூ.20 ஆயிரம் கொடுக்க வேண்டும் என லட்சுமணன் கூறினார்.மருத்துவமனை நடத்துவதற்கான தகுதி சான்றிதழ், கல்வி சான்றிதழ்களையும் கணவர் இணை இயக்குனரிடம் கொடுத்துள்ளார். அதனை துாக்கி எறிந்து மாதந்தோறும் பணம் கொடுக்க வேண்டும், என்றார்.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மருத்துவமனை நடத்துவதற்கு யாரும் இடையூறு செய்யக்கூடாது என என் கணவர் வழக்கு தொடர்ந்தார். இணை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பினார்.


மிரட்டல்

அப்போது ' நோட்டீஸ் அனுப்பும் அளவுக்கு வந்து விட்டாயா என இணை இயக்குனர், கணவரை மிரட்டி, 'மருத்துவமனைக்கு சீல் வைத்து, கைது செய்யாமல் விடமாட்டேன். ஊரைவிட்டு ஓடி விடு, இல்லை குடும்பத்துடன் செத்துப்போ' என மிரட்டினார். மன உளைச்சலுக்காளான கணவர் இதை என்னிடம் கூறி அழுதார். அவருக்கு ஆறுதல் கூறினேன்.

இந்நிலையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்'' என கூறியுள்ளார்.தென்கரை போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


பொதுமக்கள் ஆவேசம்

மருத்துவ இணை இயக்குனரை கைது செய்ய வலியுறுத்தி மக்கள் ரோடு மறியலில் ஈடுபட தயாராகினர். டி.எஸ்.பி., முத்துக்குமார், நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதின் பேரில் கலைந்து சென்றனர். டி.எஸ்.பி., இணை இயக்குனரிடம் விசாரணை செய்து வருகிறார்.


மறுப்பு


இணை இயக்குனர் லட்சுமணன் கூறுகையில், ''அரசின் அங்கீகாரம் பெற்ற ஓமியோபதி மருத்துவம் படிக்காமல் கிளினிக் நடத்தியது தெரிய வந்தது. அதனால் 'சீல்' வைக்கப்படும் என எச்சரித்தேன். வடநாட்டில் மருத்துவம் படித்து, முறையாக பதிவு செய்யாமல் உள்ளதும் தெரியவந்தது. அதன்பின் அவர்கள் அனுப்பிய வக்கீல் நோட்டீசிலும் எலக்ட்ரோ ஹோமியோபதி கிளினிக் நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளனர். அவரிடம் அலைபேசியில் மிரட்டவோ, பேசவோ இல்லை. அவரது இறப்புக்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை. விஷம பிரசாரம் செய்கின்றனர்.'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X