தமிழ்நாடு

மாநகராட்சி வார்டு எண்கள்... மாற்றம்! எல்லைகள் மறு சீரமைப்பு

Updated : நவ 21, 2021 | Added : நவ 20, 2021
Share
Advertisement
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியின் தற்போதைய வார்டுகளின் எண்கள் மாற்றப்பட்டுள்ளது; சில வார்டுகளின் எல்லைகளும் மாறியுள்ளதால், அதற்கு ஏற்ப வேட்பாளரை தேர்வு செய்ய கட்சியினர் களமிறங்கியுள்ளனர்.தமிழகத்தில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்படுமென, அரசியல் கட்சியினர் பரபரப்பாகியுள்ளனர். மாவட்ட நிர்வாகமும், உள்ளாட்சி
 மாநகராட்சி வார்டு எண்கள்... மாற்றம்! எல்லைகள் மறு சீரமைப்பு

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியின் தற்போதைய வார்டுகளின் எண்கள் மாற்றப்பட்டுள்ளது; சில வார்டுகளின் எல்லைகளும் மாறியுள்ளதால், அதற்கு ஏற்ப வேட்பாளரை தேர்வு செய்ய கட்சியினர் களமிறங்கியுள்ளனர்.
தமிழகத்தில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்படுமென, அரசியல் கட்சியினர் பரபரப்பாகியுள்ளனர். மாவட்ட நிர்வாகமும், உள்ளாட்சி தேர்தலுக்காக, வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியை மேற்கொண்டுள்ளது.அ.தி.மு.க.,வில் வேட்பாளர் தேர்வு செய்யும் பணி துவங்கியுள்ளதால், பழைய மற்றும் புதிய வார்டு பட்டியலை பெற்று, வேட்பாளர் தேர்வு பணி, வார்டு வாரியாக நடந்து வருகிறது.

திருப்பூர் மாநகராட்சியில், தற்போதுள்ள 60 வார்டுகளில் எண்கள் மட்டும் மாறியுள்ளது; பெரும்பாலான வார்டுகளின் எல்லைகள் மாறாது என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, பழைய வார்டு, புதிய வார்டு பட்டியலை வைத்து, மனப்பாடம் செய்யும் அளவுக்கு, கட்சியினர் தயாராகிவிட்டனர்.

புதிய - பழைய வார்டு (அடைப்பு குறிக்குள்) விவரம்:புதிய வார்டு1 ( பழைய வார்டு 3), 2(16), 3 (17), 4(19), 5(18), 6(21), 7(20), 8(30), 9(4), 10(2), 11 (1), 12 (15), 13(11), 14(5 மற்றும் 6வது வார்டுகள்), 15 (7), 16(29), 17(28), 18(22), 19(27), 20 (26).வார்டு 21(9), 22(8), 23(10), 24 மற்றும் 28 (13), 25(14), 26 மற்றும் 27 (12), 29(47), 30(25), 31(24), 32(23), 33(33), 34(32), 35(31), 36(48), 37(46) , 38 (60), 39(59), 40(58), 41(57), 42(56), 43(49);வார்டு 44(45), 45(44), 46(34), 47(35), 48 (38 , 49) (39 மற்றும் 40), 50(52), 51(42), 52 (50), 53(54 மற்றும் 55), 54 (53), 55 (51), 56(41), 57(52), 58(37), 59(36), 60(36).பழைய 5 மற்றும் 6வது வார்டுகளை ஒருங்கிணைத்து, புதிய 14வது வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. பழைய 24 மற்றும் 28 வது வார்டுகளை ஒருங்கிணைத்து, 13வது வார்டு உருவாக்கப்பட்டுள்ளது.பழைய 39 மற்றும் 40வது வார்டுகளை ஒருங்கிணைத்து, 49வது வார்டு; பழைய 54 மற்றும் 55வது வார்டுகளை ஒருங்கிணைத்து, 53வது வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல், பழைய 12வது வார்டு, தற்போது, 26 மற்றும் 27 வது வார்டாக பிரிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சியினர் கூறுகையில்,'கடந்த தேர்தலுக்கு பிறகு, 2018ல் வார்டு சீரமைப்பு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், புதிய வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளது. சில வார்டுகளை தவிர்த்து, பெரும்பாலான வார்டு எல்லைகள் மாறவில்லை. மாநகராட்சியில் இருந்து கிடைத்த வார்டு பட்டியல் அடிப்படையில், வேட்பாளர் தேர்வு நடந்து வருகிறது. தேர்தல் தேதி அறிவித்த பிறகுதான், இட ஒதுக்கீடு விவரம் வெளியிடப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X