பொது செய்தி

தமிழ்நாடு

எருமேலி பாதையில் பக்தர்களை அனுமதிக்க நடவடிக்கை: தேவசம்போர்டு தலைவர் தகவல்

Added : நவ 20, 2021
Share
Advertisement
சபரிமலை:எருமேலி பாதையில் சபரிமலைக்கு பக்தர்களை அனுமதிக்க முயற்சி நடப்பதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் கூறினார்.பத்தணந்திட்டையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கோயில்களுக்கு சொந்தமாக உள்ள ஏராளமான நிலங்கள் பயன்படாமல் உள்ளது. இந்த நிலங்களில் இருந்து வருமானம் வரும் வகையில் பயிர்கள் நடவும், கடைகள் கட்டி வாடகைக்கு விடவும் நடவடிக்கை

சபரிமலை:எருமேலி பாதையில் சபரிமலைக்கு பக்தர்களை அனுமதிக்க முயற்சி நடப்பதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் கூறினார்.
பத்தணந்திட்டையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கோயில்களுக்கு சொந்தமாக உள்ள ஏராளமான நிலங்கள் பயன்படாமல் உள்ளது. இந்த நிலங்களில் இருந்து வருமானம் வரும் வகையில் பயிர்கள் நடவும், கடைகள் கட்டி வாடகைக்கு விடவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கோயில் காணிக்கையை மட்டும் வைத்து நிர்வாகம் நடத்துவது சிரமமான காரியமாகும். சபரிமலையில் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் விரைவில் மாறும் என்ற நம்பிக்கை உள்ளது. எருமேலி-கரிமலை பாரம்பரிய பாதை வழியாக பக்தர்களை அனுப்புவதற்கான முயற்சிகளை தேவசம்போர்டு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
சன்னிதானம், பம்பையில் உள்ள மருத்துவமனைகளை மேலும் நவீனப்படுத்த அனுமதி கிடைத்துள்ளது. முன்பதிவு செய்தவர்களை விட குறைவான பக்தர்கள்தான் தற்போது தரிசனத்துக்கு வருகின்றனர். பம்பை நதியில் வெள்ளம் குறைந்ததும் பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
பம்பையில் நுணங்ஙாறு பாலம் தேவசம்போர்டு கட்ட வேண்டும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாலத்தை நீர்வளத்துறைதான் கட்ட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். விரைவில் இதில் முடிவு எட்டப்படும். இவ்வாறு கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X