அரசியல் செய்தி

தமிழ்நாடு

பிரதமர் முடிவை வரவேற்கிறோம் திருமாவளவன் பேட்டி: * திருமாவளவன் பேட்டி

Added : நவ 20, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்:விவசாயச் சட்டங்கள் வாபஸ் அரசியல் ஆதாயத்திற்காக நடந்துள்ளதாக கூறுகின்றனர். இருந்தாலும் பிரதமர் நரேந்திர மோடியின் இந்த முடிவை வரவேற்கிறோம் என வி.சி.க., தலைவர் திருமாவளவன் கூறினார்.ராமநாதபுரத்தில் தமிழர் எழுச்சிநாள், சமூகநீதி சமூகங்களின் ஒற்றுமை என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. இதில், ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனி, எம்.எல்.ஏ., காதர்பாட்ஷா
 பிரதமர் முடிவை வரவேற்கிறோம் திருமாவளவன் பேட்டி: * திருமாவளவன் பேட்டி

ராமநாதபுரம்:விவசாயச் சட்டங்கள் வாபஸ் அரசியல் ஆதாயத்திற்காக நடந்துள்ளதாக கூறுகின்றனர். இருந்தாலும் பிரதமர் நரேந்திர மோடியின் இந்த முடிவை வரவேற்கிறோம் என வி.சி.க., தலைவர் திருமாவளவன் கூறினார்.
ராமநாதபுரத்தில் தமிழர் எழுச்சிநாள், சமூகநீதி சமூகங்களின் ஒற்றுமை என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. இதில், ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனி, எம்.எல்.ஏ., காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தனர்.

இதில் பங்கேற்ற சிதம்பரம் எம்.பி.,யும், வி.சி.க., தலைவர் திருமாவளவன் கூறியதாவது: வேளாண் சட்டங்களை பிரதமர் நரேந்திரரோடி திரும்ப பெற்றது விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.மத்திய அரசு உயிர் இழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு இழப்பீடு, அரசு வேலை வழங்கி, பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.

விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும். அரசியல் ஆதாயம் என்றாலும் பிரதமர் மோடி முடிவை வரவேற்கிறோம்இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X