பொது செய்தி

தமிழ்நாடு

அகதிகளுக்கு இந்திய குடியுரிமை

Added : நவ 20, 2021
Share
Advertisement
கண்டவராயன்பட்டி--திருப்புத்துார் ஒன்றியம் காரையூரில் இலங்கை அகதிகள் முகாமில் இலங்கைத் தமிழர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கி அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில், 'இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்' என்றார்.இலங்கை அகதிகளுக்கு வருவாய் மற்றும் பேரிடர்மேலாண்மைத் துறை சார்பில் இலவச சமையல்எரிவாயு அடுப்பு, சிலிண்டர்

கண்டவராயன்பட்டி--திருப்புத்துார் ஒன்றியம் காரையூரில் இலங்கை அகதிகள் முகாமில் இலங்கைத் தமிழர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கி அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில், 'இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்' என்றார்.இலங்கை அகதிகளுக்கு வருவாய் மற்றும் பேரிடர்மேலாண்மைத் துறை சார்பில் இலவச சமையல்எரிவாயு அடுப்பு, சிலிண்டர் உள்ளிட்ட நலத் திட்டங்களை வழங்கி அமைச்சர் பேசியதாவது:வெளிநாடுகளில் குடியேறியவர்கள் கடந்த காலங்களில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக தாயகம் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.குறிப்பாக இலங்கையிலிருந்து இருமுறை அவ்வாறு தமிழர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். தி.மு.க., ஆட்சியில் தான் இந்த மறுவாழ்வு முகாம்கள் அமைக்கப்பட்டன.வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு தனித்துறை அமைத்து அமைச்சகம்அமைக்கப்பட்டுள்ளது.குடியிருப்புகளை புதுப்பிக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. அடுத்து குடியுரிமை கிடைக்க மத்திய அரசை வலியுறுத்தி பெற்றுத் தருவோம்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X