பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு வங்கிகளில் ரூ.62.50 கோடி பயிர்கடன்

Added : நவ 20, 2021
Share
Advertisement
சிவகங்கை---மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் நடப்பாண்டு 12,907 விவசாயிகளுக்கு ரூ.62.50 கோடி பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளதாக சிவகங்கை கூட்டுறவு வார விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.சிவகங்கையில் கூட்டுறவு வார விழா கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில்சுகாதாரத்துறையினர் ஏற்பாடு செய்த காய்ச்சல்சிகிச்சை நடமாடும் வாகனத்தை அமைச்சர்

சிவகங்கை---மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் நடப்பாண்டு 12,907 விவசாயிகளுக்கு ரூ.62.50 கோடி பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளதாக சிவகங்கை கூட்டுறவு வார விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.சிவகங்கையில் கூட்டுறவு வார விழா கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில்சுகாதாரத்துறையினர் ஏற்பாடு செய்த காய்ச்சல்சிகிச்சை நடமாடும் வாகனத்தை அமைச்சர் துவக்கி வைத்தார்.விழாவில் அவர் பேசியது: நடப்பு நிதி ஆண்டில் 12,907 விவசாயிகளுக்கு ரூ.62 கோடியே 50 லட்சம் பயிர்கடன், இதர கடனாக 46,350 பேருக்கு ரூ.238 கோடியே 28 லட்சம் வழங்கியுள்ளனர், என்றார். 6,342 பயனாளிகளுக்கு ரூ.30 கோடிக்கான கடன் உத்தரவை வழங்கினர். சிறந்த கூட்டுறவு சங்கங்கள், பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர். மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் ரவிச்சந்திரன், கூட்டுறவு இணை பதிவாளர் ஜினு பங்கேற்றனர். துணை பதிவாளர் வெங்கட்லட்சுமி நன்றி கூறினார்.அமைச்சர் காலில் ஒரு பெண் விழுந்து மனு அளித்தபோது அதை படம் எடுக்கவிடாமல் அமைச்சருடன் வந்த நிர்வாகி ஒருவர் நிருபர்களை மிரட்டினார்.அழைப்பிதழில் பெயர் இல்லாததால் கூட்டுறவு வார விழாவை மத்திய, தொடக்க கூட்டுறவு கடன் சங்க தலைவர்கள், இயக்குனர்கள் புறக்கணித்தனர்.போலி கடன் உத்தரவு

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X