புகை பிடித்தலின் கெடுதல் குறித்து தொடர்ந்து பல ஆண்டுகளாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை என்பதே நிதர்சனம். இருப்பினும், புகையிலை ஒழிப்பு குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அவ்வகையில்,திருப்பூர், முதலிபாளையம் 'நிப்ட்-டீ' கல்லுாரியில், புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமையில், மாணவர்கள், 'புகையில்லா சமூகம் அமைப்போம்' என உறுதிமொழி ஏற்றனர்.அதன் தொடர்ச்சியாக புகையிலை ஒழிப்பின் அவசியத்தை வலியுறுத்தும்வகையில் ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. புகைப்பிடித்தல், மது அருத்துவது, போதை மாத்திரை, ஊசி, புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கும் வகையிலும்; புகையிலை பயன்பாட்டை கைவிடவேண்டும் என வலியுறுத்தும்வகையில், மாணவ, மாணவியர் ஓவியம் தீட்டினர்.புகையிலை ஒழிப்பு குறித்து மாணவர்கள் பங்கேற்ற விவாத நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி நுாலகர் முத்துபாரதி தலைமையில், சிறப்பாக விவாதித்த பி.காம்., மூன்றாம் ஆண்டு மாணவியர் ஸ்ரீமதி, இந்துமதி, முஜித்ரா, இண்டாம் ஆண்டு மாணவர்கள் பிரவீன், மகேஸ்வரி, முதலாம் ஆண்டு மாணவி அபிநாய ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது. ஓவியப்போட்டியில் வெற்றிபெற்ற பி.எஸ்.சி., முதலாமாண்டு மாணவர்கள் சரவணகுமார், ரோஷினிக்கு பரிசளிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE