ரூல் கர்வ் பெரியாறு அணைக்கு பொருந்தாது பா.ஜ., விவசாய அணி தலைவர் சாடல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ரூல் கர்வ்' பெரியாறு அணைக்கு பொருந்தாது பா.ஜ., விவசாய அணி தலைவர் சாடல்

Added : நவ 20, 2021 | கருத்துகள் (1)
Share
மதுரை:''ரூல் கர்வ் நடைமுறை முல்லை பெரியாறு அணைக்கு பொருந்தாது. திடீரென தி.மு.க., ஆட்சியில் இந்தாண்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது,'' என பா.ஜ., விவசாய அணி பிரிவு மாநில தலைவர் நாகராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.அவர் கூறியுள்ளதாவது:கேரள அரசுடன் இணைந்து தி.மு.க., அரசு தமிழக விவசாயிகளுக்கு செய்யும் கூட்டுசதி இந்த நடைமுறை.72 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட இடுக்கி அணைக்கும் இது

மதுரை:''ரூல் கர்வ் நடைமுறை முல்லை பெரியாறு அணைக்கு பொருந்தாது. திடீரென தி.மு.க., ஆட்சியில் இந்தாண்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது,'' என பா.ஜ., விவசாய அணி பிரிவு மாநில தலைவர் நாகராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது:கேரள அரசுடன் இணைந்து தி.மு.க., அரசு தமிழக விவசாயிகளுக்கு செய்யும் கூட்டுசதி இந்த நடைமுறை.72 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட இடுக்கி அணைக்கும் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை. வெறும் 15.5 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட முல்லைபெரியாறு அணைக்கு மட்டும் ரூல் கர்வ் நடைமுறையை திடீரென புகுத்தி 139 அடி மட்டத்திலேயே நீரை திறந்து விடுவது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும்.

ரூல் கர்வ் முறை இடுக்கி அணையில் கேரளஅரசு நடைமுறைப்படுத்துவதில்லை. பெரியாறு அணையின் உண்மையான முழு நீர்மட்டம் உயரம் 152 அடி. 142 அடி என்பது உச்சநீதிமன்ற தற்காலிக தீர்ப்பு தான். ரூல்கர்வ் முறை முல்லை பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர விடுதிகள், நடிகர்களின் பங்களாக்களை நீரில் மூழ்காமல் பாதுகாக்க உருவாக்கப்பட்ட திட்டம். இதுகுறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சரியான விளக்கத்தை விவசாயிகளுக்கு அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X