பொது செய்தி

தமிழ்நாடு

கீழப்பூங்குடி வீரங்கண்மாய்க்கு தண்ணீர்திறக்க கோரி கடையடைப்பு, மறியல்

Added : நவ 20, 2021
Share
Advertisement
சிவகங்கை--கீழப்பூங்குடிக்கு பெரியாறு கால்வாய் தண்ணீர் திறந்துவிடக்கோரி கிராமத்தினர் கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டம் நடத்தினர்.வடகிழக்கு பருவ மழையால் பெரியாறு, வைகை பாசன கால்வாய்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி வருகின்றன. இவை சிவகங்கை மாவட்ட கண்மாய்களை நிரப்பி மறுகால் பாய்ந்து வருகிறது. இந்நிலையில் சிவகங்கை அருகே வீரப்பட்டி ஆலங்கண்மாய் நிரம்பி மறுகால்

சிவகங்கை--கீழப்பூங்குடிக்கு பெரியாறு கால்வாய் தண்ணீர் திறந்துவிடக்கோரி கிராமத்தினர் கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டம் நடத்தினர்.வடகிழக்கு பருவ மழையால் பெரியாறு, வைகை பாசன கால்வாய்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி வருகின்றன. இவை சிவகங்கை மாவட்ட கண்மாய்களை நிரப்பி மறுகால் பாய்ந்து வருகிறது. இந்நிலையில் சிவகங்கை அருகே வீரப்பட்டி ஆலங்கண்மாய் நிரம்பி மறுகால் பாயும் தண்ணீரை வலையராதினிபட்டி விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு பயன் படுத்தினர். கடந்த 15 நாட்களாக அவர்கள் பெரியாறு, வைகை கால்வாய் பாசன நீரை எடுத்துள்ளனர். இதனால் கீழப்பூங்குடியில் உள்ள 12 க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு மழை நீர் சேகரமாகவில்லை. எனவே வீரப்பட்டி ஆலங்கண்மாய்க்கு செல்லும் நீரை கீழப்பூங்குடியில் உள்ள வீரங்கண்மாய்க்கு திருப்பி விடக்கோரி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால் வீரப்பட்டி மக்கள் கண்மாய் மடையை திறக்க மறுத்துவிட்டனர். தாசில்தார் தர்மலிங்கம் தலைமையில் நடந்த சமரச பேச்சு வார்த்தையில் ஒரு பகுதிக்கு 5 நாட்கள் வீதம் தண்ணீர் திறக்க அனுமதித்தார். ஆனால் வீரப்பட்டி ஆலங்கண்மாயில் நீர் திறக்கவில்லை. இதை கண்டித்து நேற்று கீழப்பூங்குடி விவசாயிகள் கடைகளை அடைத்து, பஸ் ஸ்டாண்ட் அருகே மறியலில் ஈடுபட்டனர்.இன்ஸ்பெக்டர் முத்துமீனாட்சி தலைமையில் போலீஸ் பாதுகாப்பில் ஈடுபட்டனர். வருவாய், போலீஸ் பேச்சு வார்த்தைக்கு பின் வீரப்பட்டி ஆலங்கண்மாயில் அடைப்பு ஏற்படுத்தி கீழப்பூங்குடிக்கு தண்ணீர் திறந்து விட்டதால் மறியலை கைவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X