சிலவரி அரசியல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சிலவரி அரசியல்

Added : நவ 20, 2021
Share
கரூர் தனியார் பள்ளி பிளஸ் 2 மாணவி பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதும், பாலியல் துன்புறுத்தலால் இறக்கும் கடைசி பெண்ணாக தான் இருக்க வேண்டும் என உருக்கமாக கடிதம் எழுதியுள்ள செய்தியும் என்னை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த மாணவிக்கு எனது அஞ்சலி.- பன்னீர்செல்வம், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர்பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மாட்டோம் என தமிழக அரசு

கரூர் தனியார் பள்ளி பிளஸ் 2 மாணவி பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதும், பாலியல் துன்புறுத்தலால் இறக்கும் கடைசி பெண்ணாக தான் இருக்க வேண்டும் என உருக்கமாக கடிதம் எழுதியுள்ள செய்தியும் என்னை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த மாணவிக்கு எனது அஞ்சலி.
- பன்னீர்செல்வம், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர்
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மாட்டோம் என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது, அதை ஏன் செய்ய முடியாது என்பதற்கு நீண்ட அதிகாரத்துவ விளக்கத்தை அளித்துள்ளனர். ஆனால் தேர்தல் அறிக்கையில் குறைப்பதாக ஏன் வாக்குறுதி அளித்தார்கள் என்பதுதான் முக்கிய கேள்வி.
- அண்ணாமலை, தமிழக பா.ஜ., தலைவர்
மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதையடுத்து கடந்தாண்டு பொங்கல் விழாவில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை காணவந்த ராகுல், மதுரை விமான நிலையத்தில் அளித்த பேட்டி தற்போது பரவி வருகிறது.
- கே.எஸ்.அழகிரி, தமிழக காங்., தலைவர்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்னை வரும் மத்திய குழு தமிழகத்திற்கு வேண்டிய நிதியை நிச்சயம் ஒதுக்க வேண்டும்.
- விஜயகாந்த், தே.மு.தி.க., நிறுவனர்
2026 சட்டசபை தேர்தலில் கூட்டணி ஆட்சியே உருவாகும்.ஹிந்துக்களை ஒருங்கிணைத்து வலுவான சக்தியாக புதிய தமிழகம் கட்சி ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்கும்.
- கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் தலைவர்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X