சிவகங்கையில் காணை க்கு பலியாகும் கால்நடைகள் டாக்டர்கள், தடுப்பூசியின்றி உயிரிழப்பு அதிகம்| Dinamalar

சிவகங்கையில் 'காணை' க்கு பலியாகும் கால்நடைகள் டாக்டர்கள், தடுப்பூசியின்றி உயிரிழப்பு அதிகம்

Added : நவ 20, 2021
Share
சிவகங்கை--சிவகங்கையில் பரவிவரும் காணை நோயால் கால்நடைகள் பலியாகி வருவதை கட்டுப்படுத்த அரசு தடுப்பூசி ஒதுக்கீடு செய்யாததால் விவசாயிகள் இழப்பை சந்திக்கின்றனர். சிவகங்கை மாவட் டத்தில் பசு, எருமை, காளை என 2 லட்சத்து 6 ஆயிரத்து 500 கால்நடைகள் உள்ளன. தொடர் மழையால் தற்போது கால்நடைகளுக்கு காணை நோய் பரவி வருகிறது. இந்நோய் தாக்கப்படும் பசு, கன்றுகளுக்கு வாய், காலில் நுரைபோல்

சிவகங்கை--சிவகங்கையில் பரவிவரும் காணை நோயால் கால்நடைகள் பலியாகி வருவதை கட்டுப்படுத்த அரசு தடுப்பூசி ஒதுக்கீடு செய்யாததால் விவசாயிகள் இழப்பை சந்திக்கின்றனர்.

சிவகங்கை மாவட் டத்தில் பசு, எருமை, காளை என 2 லட்சத்து 6 ஆயிரத்து 500 கால்நடைகள் உள்ளன. தொடர் மழையால் தற்போது கால்நடைகளுக்கு காணை நோய் பரவி வருகிறது. இந்நோய் தாக்கப்படும் பசு, கன்றுகளுக்கு வாய், காலில் நுரைபோல் பொங்கி வரும். இவை முற்றி உணவு எடுக்க முடியாமல் பலியாகின்றன.இது வரை சிவகங்கை மாவட்டத்தில ஏராளமான கால்நடைகள் காணை நோய்க்கு பலியாகியுள்ளன. காணை நோயில் இருந்து கால்நடைகளை பாதுகாக்க 6 மாதத்திற்கு ஒரு முறை (ஒரு டோஸ்) 2 மில்லி அளவிற்கு தடுப்பூசி போடப்படும்.சிவகங்கை மாவட்டத்திற்கு தேவையான 2.06 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்தை அரசு வினியோகம் செய்யவில்லை. இதனால் காணை நோய் அதிகரித்து கால்நடைகள் பலியாகி வருகின்றன. மேலும் இங்குள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க 87 உதவி கால்நடை மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும். பல ஆண்டாக உதவி கால்நடை டாக்டர்கள் பணியிடத்தை அரசு நிரப்பவில்லை.தற்போது சிவகங்கை மாவட்ட அளவில் 16 டாக்டர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களால் கால்நடைகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியவில்லை. இதன் காரணமாக காணை நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் கால்நடைகள் பலியாகி வருகின்றன. மாவட்ட நிர்வாகம் காணை நோய் தாக்குதலை தடுக்க கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X