செய்தி செய்தி

தமிழ்நாடு

ரோட்டரி ஸ்கிரீன் பிரின்டிங் 24, 25ல் உற்பத்தி நிறுத்தம் 

Added : நவ 20, 2021
Share
Advertisement
திருப்பூர்: திருப்பூரில், பின்னலாடை துறை சார்ந்து 60 ரோட்டரி பிரின்டிங் நிறுவனங்கள் இயங்குகின்றன. ஐந்தாயிரம் தொழிலாளர் வேலைவாய்ப்பு பெற்றுவருகின்றனர்.அனைத்து மூலப்பொருட்கள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடால், ரோட்டரி பிரின்டிங் நிறுவனங்கள் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளன. இதனால், கோரிக்கைகளை வலியுறுத்தி, உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்த ரோட்டரி பிரின்டிங்

திருப்பூர்: திருப்பூரில், பின்னலாடை துறை சார்ந்து 60 ரோட்டரி பிரின்டிங் நிறுவனங்கள் இயங்குகின்றன. ஐந்தாயிரம் தொழிலாளர் வேலைவாய்ப்பு பெற்றுவருகின்றனர்.அனைத்து மூலப்பொருட்கள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடால், ரோட்டரி பிரின்டிங் நிறுவனங்கள் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளன. இதனால், கோரிக்கைகளை வலியுறுத்தி, உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்த ரோட்டரி பிரின்டிங் துறையினர் முடிவு செய்துள்ளனர்.ரோட்டரி ஸ்கிரீன் பிரின்டிங் அசோசியேஷன் (ரோஸ்பா) சங்க தலைவர் பழனிசாமி கூறியதாவது:பைண்டர், திக்னர், பிக்ஸர், பி.வி.ஏ., ஸ்கிரீன் கோட்டிங், விறகு உட்பட அனைத்து பிரின்டிங் மூலப்பொருட்கள் விலையும் 50 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. இதனால், ரோட்டரி பிரின்டிங் உற்பத்தி செலவினமும் அபரிமிதமாக உயர்ந்துள்ளது.கட்டண தொகையை வழங்க, ஆடை உற்பத்தி நிறுவனங்கள் இழுத்தடிக்கின்றன. இதனால், நிதிச்சுமை மேலும் அதிகரிக்கிறது. பிரின்டிங் மூலப்பொருட்கள் விலையை கட்டுப்படுத்த வேண்டும். ரோட்டரி பிரின்டிங் கட்டணம் 30 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.கட்டண தொகையை, 30 நாட்களுக்குள் மற்றும் நிலுவையில் உள்ள கட்டண தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும்.இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 24, 25 ஆகிய தேதிகளில், ரோட்டரி ஸ்கிரீன் பிரின்டிங் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி, போராட்டம் நடத்துகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X