ஏலக்காய் செடியில் அழுகல் கட்டுப்படுத்த ஆலோசனை

Added : நவ 20, 2021
Share
Advertisement
கம்பம்--ஏலக்காய் சீசனில் 30 சதவீதம் மகசூல் குறைந்த நிலையில், தற்போது அழுகல் நோய் தாக்கியிருப்பது விவசாயிகளை கவலையடைய வைத்துள்ளது.இடுக்கி, வயநாடு மாவட்டங்களில் ஏலக்காய்அதிகளவில் சாகுபடியாகிறது. ஏலக்காய்க்கு 50 சதவீதம் மழை, 50 சதவீதம் வெயில் இருக்க வேண்டும்.தொடர் வெயில், மழை ஆபத்தாகும். சில மாதங்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. ஏலச்செடிகளில் அழுகல் நோய் தாக்க

கம்பம்--ஏலக்காய் சீசனில் 30 சதவீதம் மகசூல் குறைந்த நிலையில், தற்போது அழுகல் நோய் தாக்கியிருப்பது விவசாயிகளை கவலையடைய வைத்துள்ளது.இடுக்கி, வயநாடு மாவட்டங்களில் ஏலக்காய்அதிகளவில் சாகுபடியாகிறது. ஏலக்காய்க்கு 50 சதவீதம் மழை, 50 சதவீதம் வெயில் இருக்க வேண்டும்.தொடர் வெயில், மழை ஆபத்தாகும். சில மாதங்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. ஏலச்செடிகளில் அழுகல் நோய் தாக்க துவங்கியுள்ளது. காய், சரம், தட்டை, வேர் என அனைத்து பகுதிகளிலும் அழுகல் நோய் தாக்கி வருகிறது.இதனை கட்டுப்படுத்த ஏலக்காய் சாகுபடி ஆலோசகர் அன்பழகன் கூறியதாவது:செடியில் அழுகலை கட்டுப்படுத்த 100 லி.நீரில் 200 மி., இன்பினிட்டோ அல்லது ரிடோமில்கோல்டு 250 கிராம் அல்லது மேக்சிடோட்டு 250 கிராம் அல்லது காப்பர் சல்பேட் 1 சதவீதம்என்ற அளவில் செடிகளின்மீது தெளித்து காப்பாற்றலாம்.கிழங்கு அழுகல் அதிகம் காணப்படும் செடிகளில் மட்டும் எமிஸ்டோ பிரைம் 100 லி. நீரில் சிஓசி 250 கிராம் என இரண்டையும் கலந்து ஓரு செடிக்கு இரண்டு லிட்டர் வீதம் தெளிக்கவும். இவ்வாறு செய்தால் அழுகல்நோயிலிருந்து ஏலச்செடிகளை காப்பாற்றலாம் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X