மதுரை:திருவனந்தபுரம் - நாகர்கோவில் ரயில் பாதையில் குழித்துறை அருகே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நேற்றிரவு குருவாயூரிலிருந்து புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் விரைவு ரயில் (16128), இன்று( நவ., 21) காலை சென்னை எழும்பூரிலிருந்து குருவாயூர் புறப்படும் விரைவு ரயில்(16127) திருநெல்வேலி- குருவாயூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.
நேற்றிரவு சென்னையில் புறப்பட வேண்டிய கொல்லம் அனந்தபுரி விரைவு ரயில் (16723) , இன்று (நவ.,21) கொல்லத்திலிருந்து சென்னை எழும்பூர் புறப்படும் அனந்தபுரி விரைவு ரயில்(16724) ஆகியவை நாகர்கோவில் - கொல்லம் இடையே ரத்து செய்யப்படுகிறது.
இன்று(நவ., 21) திருச்சியிலிருந்து புறப்பட வேண்டிய திருவனந்தபுரம் இன்டர்சிட்டி விரைவு ரயில்(22627), இன்று(நவ., 21) திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட வேண்டிய திருச்சி இன்டர்சிட்டி விரைவு ரயில்(22628) திருநெல்வேலி- திருவனந்தபுரம் இடையே ரத்து செய்யப்படுகிறது.
இன்று(நவ.,21) திருநெல்வேலியிலிருந்து புறப்படும் பிலாஸ்பூர் சிறப்பு ரயில்(06070) திருவனந்தபுரத்திலிருந்து இயக்கப்படும்.
நேற்று, இன்று(நவ., 20, 21) மதுரையிலிருந்து புறப்படும் புனலுார் விரைவு ரயில்(16729) திருநெல்வேலி வரை இயக்கப்படும்.மறுமார்க்கத்தில் இந்த ரயில்(16730) திருநெல்வேலியிலிருந்து அதிகாலை 4:00 மணிக்கு புறப்பட்டு மதுரை வந்து சேரும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE