சேதமடைந்த கூடலுார்- கே.ஜி.பட்டி ரோடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சேதமடைந்த கூடலுார்- கே.ஜி.பட்டி ரோடு

Added : நவ 20, 2021
Share
கூடலூர்-தொடர்ந்து பெய்த மழையால் கூடலூரில் இருந்து குள்ளப்ப கவுண்டன்பட்டி ( கே.ஜி. பட்டி) செல்லும் ரோடு சேதமடைந்துள்ளது.இந்த ரோடு 4 கி.மீ., தூரம் கொண்டதாகும். ரோடு வழியாக சுருளி அருவி, சுருளியாறு மின் நிலையத்திற்கு வாகனங்கள் அதிக அளவில் செல்லும். மேலும் விளைநிலங்களுக்கு செல்லும் வாகனங்களும் அதிகம்.2019 ல் கூடலூர் துவக்க பகுதியில் 2 கி.மீ., தூரம் மட்டும் தார் ரோடு

கூடலூர்-தொடர்ந்து பெய்த மழையால் கூடலூரில் இருந்து குள்ளப்ப கவுண்டன்பட்டி ( கே.ஜி. பட்டி) செல்லும் ரோடு சேதமடைந்துள்ளது.இந்த ரோடு 4 கி.மீ., தூரம் கொண்டதாகும். ரோடு வழியாக சுருளி அருவி, சுருளியாறு மின் நிலையத்திற்கு வாகனங்கள் அதிக அளவில் செல்லும். மேலும் விளைநிலங்களுக்கு செல்லும் வாகனங்களும் அதிகம்.2019 ல் கூடலூர் துவக்க பகுதியில் 2 கி.மீ., தூரம் மட்டும் தார் ரோடு சீரமைக்கப்பட்டது. மீதமுள்ள 2 கி.மீ., தூரம் சீரமைக்காததால் கடந்த சில தினங்களாக பெய்த மழையில் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். விரைவில் சீரமைக்க மாநில நெடுஞ்சாலைத்துறை முன்வர வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X