செய்தி செய்தி

தமிழ்நாடு

மொபைல் போன் பழுது நீக்குதல்: இலவச பயிற்சிக்கு அழைப்பு

Added : நவ 20, 2021
Share
Advertisement
திருப்பூர்: மொபைல்போன் பழுது நீக்கும் இலவச பயிற்சிக்கு கனரா வங்கியின் பயிற்சி மையம் அழைப்பு விடுத்துள்ளது.திருப்பூர் - அவிநாசி ரோடு, அனுப்பர்பாளையம் புதுாரில், கோவை டிபார்ட்மென்டல் ஸ்டோர் காம்ப்ளக்ஸ் இரண்டாவது மாடியில் கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் இயங்குகிறது.இம்மையத்தில், மொபைல்போன் பழுது நீக்கும் இலவச பயிற்சி, வரும் 27ம் தேதி துவங்குகிறது.

திருப்பூர்: மொபைல்போன் பழுது நீக்கும் இலவச பயிற்சிக்கு கனரா வங்கியின் பயிற்சி மையம் அழைப்பு விடுத்துள்ளது.திருப்பூர் - அவிநாசி ரோடு, அனுப்பர்பாளையம் புதுாரில், கோவை டிபார்ட்மென்டல் ஸ்டோர் காம்ப்ளக்ஸ் இரண்டாவது மாடியில் கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் இயங்குகிறது.இம்மையத்தில், மொபைல்போன் பழுது நீக்கும் இலவச பயிற்சி, வரும் 27ம் தேதி துவங்குகிறது. வல்லுனர்கள் பங்கேற்று, செல்போன் பழுது கண்டுபிடித்தல் மற்றும் சரி செய்வது குறித்து பயிற்சி அளிக்கின்றனர்.இப்பயிற்சியில், திருப்பூர் மாவட்ட கிராமப்புற வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோர் மட்டும் பங்கேற்கலாம். பயிற்சிக்கு எவ்வித கட்டணமும் செலுத்தவேண்டியதில்லை. தினமும் காலை, 9:30 முதல் மாலை, 5:30 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி நாளில், காலை, மாலை டீ, மதிய உணவு மற்றும் பயிற்சி உபகரணங்கள், சீருடை வழங்கப்படும்.பயிற்சியின் ஒருபகுதியாக, தொழில் துவங்க கடன் பெறுவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்படும். பயிற்சி முடிவில், தேர்ச்சி பெறுவோருக்கு, மத்திய அரசின் 'ஸ்கில் இந்தியா' சான்று வழங்கப்படும்.மேலும் விவரங்களுக்கு, 99525 18441, 86105 33436, 94890 43923, 77082 74497 என்கிற எண்களில் தொடர்புகொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X