பொது செய்தி

தமிழ்நாடு

காகிதங்கள் மறுசுழற்சி: காலண்டர் அட்டை தயாரிப்பு : மாற்றத்தை ஏற்படுத்தும் மாற்றுத்திறனாளிகள்

Added : நவ 20, 2021
Share
Advertisement
பெரியகுளம்-இன்றைய சூழலில் படித்து பட்டம் பெற்ற லட்சகணக்கான இளைஞர்களுக்கு கல்வி தகுதிக்கு வேலை எளிதில் கிடைப்பதில்லை. சிலர் தொடர் முயற்சி, கடின உழைப்பால் நினைத்ததை அடைகின்றனர். நினைத்த வேலை கிடைக்கும் வரை, கிடைத்த வேலையை செய்வது தப்பில்லை. பெற்றோர்களை எதிர்பார்க்காமல் அன்றாட செலவுக்கு வருமானம் சம்பாதிக்கலாம் என்ற நம்பிக்கையில் பழைய காகிதங்களை மறுசுழற்சி செய்து

பெரியகுளம்-இன்றைய சூழலில் படித்து பட்டம் பெற்ற லட்சகணக்கான இளைஞர்களுக்கு கல்வி தகுதிக்கு வேலை எளிதில் கிடைப்பதில்லை. சிலர் தொடர் முயற்சி, கடின உழைப்பால் நினைத்ததை அடைகின்றனர். நினைத்த வேலை கிடைக்கும் வரை, கிடைத்த வேலையை செய்வது தப்பில்லை. பெற்றோர்களை எதிர்பார்க்காமல் அன்றாட செலவுக்கு வருமானம் சம்பாதிக்கலாம் என்ற நம்பிக்கையில் பழைய காகிதங்களை மறுசுழற்சி செய்து பாலிதீன் பயன்பாட்டை குறைக்கும் முயற்சியாக மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பினர் களம் இறங்கியுள்ளனர். பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லுாரியில் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் காகித மறுசுழற்சி தொழிலுக்கு இயந்திரங்கள் வாங்க ரூ.10 லட்சம் கடன் பெற்று 'சர்வோதீப் ஸ்டார் காகித மறுசுழற்சி மையம்' துவங்கி ஒரு ஆண்டாக செயல்பட்டு வருகிறது. 12 பேர் கொண்ட இக் குழுவில் மாற்றுத்திறனாளிகள் 9 பேர்.பழைய காகிதங்கள் மறுசுழற்சியில் மூலப்பொருளாக மாற்றி அவற்றை இயந்திரங்கள் மூலம் அட்டைகள்களாக உருமாற்றி அட்டைபெட்டிகள், காலண்டர் அட்டை, காகித கவர், பைல்கள், விசிடிங்கார்டுகள், பைகள் என 40 வகையான பொருட்களாக மாற்றி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். இங்கு வேலை செய்யும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாழ்க்கையில் 'மாற்றத்தை ஏற்படுத்தும் திறனாளிகளாக' மாறி தினமும் ரூ.200 முதல் ரூ.300 வரை சம்பாதிக்கின்றனர்.இயக்குனர் ஏ.சகாயசங்கீதா கூறுகையில்:காகித மறுசுழற்சி மையத்தில் மாற்றுத்திறனாளிகள், சிறிதளவுமனநிலை பாதித்தவர்கள் பணியாற்றுகின்றனர். நாங்கள் தயாரிக்கும் பொருட்களுக்குசமூகஆர்வலர்கள் ஆதரவு தரவேண்டும். திருமண தாம்பூலம் பை, பள்ளி, கல்லுாரி, அரசு, தனியார் அலுவலகங்களுக்கு தேவைப்படும் பைல்கள், பேடுகள், கவர்கள் அனைத்தும் விற்பனைக்கு உள்ளது. ஒவ்வொரு விற்பனையும் மாற்றுத்திறனாளிகள் வாழ்விற்கு உதவும் என்றார். தொடர்புக்கு: 9489092729

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X