ஆரம்ப சுகாதார நிலையத்தில் யோகா பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆரம்ப சுகாதார நிலையத்தில் யோகா பயிற்சி

Added : நவ 20, 2021
Share
கம்பம்,--காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டது.75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், ஆரம்ப, துணை, வட்டார, கூடுதல் சுகாதார நிலையங்களில் தினமும் பொதுமக்களுக்கு யோகா பயிற்சி நடத்த அறிவுருத்தப்பட்டுள்ளது. பயிற்சியில் கர்ப்பிணிகள், ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள், மார்பக புற்றுநோயாளிகள் யோகா பயிற்சிகள்

கம்பம்,--காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டது.75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், ஆரம்ப, துணை, வட்டார, கூடுதல் சுகாதார நிலையங்களில் தினமும் பொதுமக்களுக்கு யோகா பயிற்சி நடத்த அறிவுருத்தப்பட்டுள்ளது. பயிற்சியில் கர்ப்பிணிகள், ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள், மார்பக புற்றுநோயாளிகள் யோகா பயிற்சிகள் வழங்கப்படும். நேற்று காமயகவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு வந்தவர்களுக்கு யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டது. உட்கடாசனம், ஏகபாத ஆசனம், அர்த்தகடி சக்ராசனம், தடாசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை சித்தா டாக்டர் சிராசுதீன் செய்து காண்பித்து பயிற்சியளித்தார். மருத்துவ அலுவலர் யோகபிரதீஷ், தொற்றா நோய் செவிலியர் சமீமா பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X